மாநாடு 22 February 2022
நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஒரே ஒரு வாக்கு கூட கமல்ஹாசனின் கட்சி வேட்பாளர் பெறவில்லை என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி உட்பட பல கட்சிகள் போட்டியிட்டன என்பதும் விறுவிறுப்பாக தேர்தல் பிரசாரம் நடந்தது.
இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் திமுக பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் சிவகங்கை நகராட்சி 1வது வார்டில் போட்டியிட்ட கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் செங்கோல் என்பவர் ஒரு வாக்கு கூட பெறவில்லை என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.வேட்பாளர் அவரது குடும்பத்தினர் கூடவா அவருக்கு வாக்களிக்கவில்லை? அவர் கூட அவருக்கு வாக்களிக்க வில்லையா?என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது.