Spread the love

மாநாடு 10 March 2022

நடிகர் சூர்யா நடித்து, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில், எதற்கும் துணிந்தவன் திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமூகத்தை இழிவு படுத்தியதாக, நடிகர் சூர்யா மீது குற்றம் சாட்டப்பட்டு, அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், இல்லை என்றால் தமிழகம் முழுவதும் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை திரையிட விடமாட்டோம் என பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, திட்டமிட்டபடி சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாகுமா? என ரசிகர்களிடையே பெருத்த எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில், இன்று தமிழகம் முழுவதும் இத்திரைப்படம் வெளியானது. தருமபுரி மாவட்டத்தில் இன்று எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியிடப்படும் என அறிவித்திருந்த நிலையில், திரைப்படத்தை காண திரையரங்குகளில் ரசிகர்கள் காலை முதலே குவிய தெர்டங்கினர்.

திரையரங்குகளில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டனர். தருமபுரியில் உள்ள திரையரங்குகளில் காலை காட்சி மட்டும் ரத்து செய்யபடுவதாக திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து திரையரங்கு உரிமையாளர் சங்க மண்டல தலைவர், டிஎன்சி இளங்கோவன் அவர்களிடம் கேட்டபோது; எதற்கும் துணிந்தவன் திரைப்படம் இன்று பென்னாகரம் ராம்பாலாஜி, அரூர் டிஎன்டி, தருமபுரி நகரில் சந்தோஸ் மற்றும் ஆனந்த் என 4 திரையங்குளில் இத்திரைப்படம் வெளியிடப்படுகிறது.

பா.ம.க தரப்பிலிருந்து திரையரங்குக்கு, எந்தவித அச்சுறுத்தலும், மிரட்டலும் இதுவரை வரவில்லை. ஆனால், திரையங்குகளின் பாதுகாப்பு கருதி காலை காட்சி மட்டும் ரத்து செய்யபட்டுள்ளது. மேலும் மேட்டனி மற்றும் இரவு காட்சிகள் வழக்கம் போல் திரையிடப்படும் என தெரிவித்தார். காலை காட்சி ரத்து செய்யபட்டதையடுத்து ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

23880cookie-checkசூர்யாவின் எதற்கும் துணிந்தவன் தர்மபுரியில் ரத்து

Leave a Reply

error: Content is protected !!