மாநாடு 11 March 2022
தமிழகத்தில் கடந்த மாதம் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் ஆளுங்கட்சியான திமுகவிற்கு பெரிதும் சாதகமாக அமைந்தது. குறிப்பாக கொங்கு மண்டல வெற்றியானது முதல்வர் மு.க.ஸ்டாலினிற்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது. அதிலும் கோவை மாவட்டத்தில் கிடைத்த வெற்றிக்காக அமைச்சர் செந்தில் பாலாஜியை கொண்டாடி தீர்த்துவிட்டாராம்.
செந்தில் பாலாஜிக்கு ஜாக்பாட்
சர்ப்ரைஸ் கிப்ட், சுதந்திரமான அணுகுமுறை என அடுத்தடுத்து ஜாக்பாட் மழை பொழியச் செய்தார். இதற்கிடையில் கோவை மாநகராட்சியின் முதல் மேயராக 19வது வார்டு கவுன்சிலர் கல்பனா ஆனந்தகுமார் பதவியேற்றுக் கொண்டார். இவருக்கு வயது 40. இவர் கோவையின் 6வது மேயர். திமுகவின் முதல் மேயர் என்பது குறிப்பிடத்தக்கது. எளிய குடும்பத்தில் இருந்து அரசியலில் இப்படியொரு முன்னேற்றம் கண்டுள்ளார்.
ஆரம்பமே அமர்க்களம்
கோவை மாநகராட்சி மேயராக பதவியேற்றதும் பேசிய கல்பனா, அடிமட்ட தொண்டரும் தலைமை பதவிக்கு வர முடியும் என்பதை நினைத்து பார்க்கையில் பெருமையாக உள்ளது. அடிப்படை வசதிகளுக்கு அதிக முக்கியத்துவம் தருவேன் என்று உறுதி அளித்திருக்கிறார். தொடக்கம் முதலே இவருடைய செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.
ஸ்டாலினுக்கு நெருடல் ஏற்கனவே சிறிய நெருடல் இருந்த வண்ணம் உள்ளது. அதாவது தமிழகத்தின் 21 மாநகராட்சி மேயர்களில் பலர் பதவிக்கு புதுசு. அரசியலுக்கே புதுசு. இவர்கள் தங்களுடைய பதவியின் அதிகாரம், கடமைகளை தெரியாமல் இருக்கின்றனர். எனவே கட்சி சீனியர்களின் கைப்பாவை போல மாறிவிடக் கூடாது என்று ஸ்டாலின் கருதுகிறாராம்.