மாநாடு 13 March 2022
பட்டுக்கோட்டையை அடுத்த பழைய பேராவூரணி பகுதியை சேர்ந்தவர் நீலகண்டன் வயது36.இவர் பேராவூரணியில் உள்ள கரூர் வைசியா வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வந்தார்.
இவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவருடைய மாமியார் வீடு பட்டுக்கோட்டை அருகே உள்ள கொண்டிகுளம் பகுதியில் உள்ளது. அவருடைய மாமியார் வீட்டுக்கு வருவதற்காக பழைய பேராவூரணி பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்தபோது கொண்டிகுளம் சாலையில் உள்ள வேகத்தைடையில் நிலை தடுமாறி தவறி விழுந்து தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து அவருடைய சகோதரர் அருள் பட்டுக்கோட்டை தாலுகா போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
246710cookie-checkபட்டுக்கோட்டை அருகில் விபத்து மோட்டார் சைக்கிளில் வந்தவர் பலி