மாநாடு 15 March 2022
உக்ரைன் நாட்டில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக போர் நடந்து வரும் நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ் நகரை ரஷ்யா கைப்பற்ற தீவிர முயற்சி எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் திடீரென ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது என அந்நகரின் மேயர் அறிவித்துள்ளார்
உக்ரைனின் கீவ் நகரில் உள்ளூர் நேரப்படி இன்று இரவு 8 மணி முதல் முழு ஊரடங்கு அமல் படுத்த படுவதாகவும் அடுத்த முப்பத்தாறு மணி நேரத்திற்கு முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் அதன் பிறகு நிலைமையை பொறுத்து ஊரடங்கை ரத்து செய்வதா அல்லது தொடர்வதா என்பது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கீவ் நகர மேயர் தெரிவித்துள்ளார். இதனால் உக்ரைன் தலைநகரில் உள்ள மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
250000cookie-checkமேயர் அறிவிப்பு தலைநகரில் மூன்று நாள் ஊரடங்கு