மாநாடு 18 March 2022
தமிழக அரசின் நிதிநிலை மேம்படும்போது மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், அதற்கான திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் நிதியமைச்சர் பட்ஜெட் தாக்கலின்போது கூறினார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலின்போது, திமுக வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டு வருவதாக கருதப்படும் நிலையில் மகளிருக்கு ரூ.1000 நிதி உதவி வழங்கும் அறிவிப்பு இன்றும் செயல்பாட்டுக்கு வராமல் உள்ளது. இதை தமிழ்நாட்டின் இல்லத்தரசிகள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால், இதுவரை அது தொடர்பான அறிவிப்பு வெளியிடாத நிலையில், சமீபத்தில் டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது அதில் வரும் நிதியை கூட இதற்கு பயன்படுத்துவார்கள் என்று ஒரு சிலர் கருதிய நிலையில் இன்றைய நிதிநிலை அறிக்கையிலும் பெண்களுக்கான மாதம் ஆயிரம் ரூபாய் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய பட்ஜெட்டில் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்காக நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. கல்விக்கு முக்கியத்தும் வழங்கப்பட்டதுடன், வேளாண் கடன், மற்றும் பல்வேறு துறைகளுக்கான முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. ஆனால், மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் குறித்து சட்டப்பேரவையில் பேசிய நிதிபமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் சரியான பயணிகளை சென்றடைய, திட்டத்தை வகுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று கூறியவர், மாநில நிதிநிலை மேம்படும்போது மகளிருக்கு ரூ.1000 உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்படும் என்று உறுதி அளித்தார்.