Spread the love

மாநாடு 22 March 2022

  1. தமிழ்நாட்டில் பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை ,அரசு அலுவலகங்களில் லஞ்சம் தடை, வாகனங்களை இயக்கும்போது போன் பேச தடை ,தேர்தலில் ஓட்டுப்போட பணம் வாங்கவும், பணம் கொடுக்கவும் தடை இவ்வாறான தடைகளை எப்படி யாருமே கடைபிடிப்பது இல்லையோ, அதே போல தான் பிளாஸ்டிக்குகாண தடையும் பேச்சி வாக்கிலும் எழுத்து வாக்கிலும் மட்டுமே இருந்து வருகிறது. அதன் சம்பந்தமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரித்த வழக்கின் அடிப்படையில் உயர்நீதிமன்றம் இவ்வாறான எச்சரிக்கையை கொடுத்திருக்கிறது.

தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால், அந்த கடைகளுக்கு சீல் வைக்க முடிவு செய்துள்ளதாக, தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது

தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் தடை கடந்த 2019-ம் ஆண்டு அமலுக்கு வந்தது. அதன்படி, 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதற்கு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் அரசின் உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றமும், தமிழகஅரசின் உத்தரவு செல்லும் என்று கூறியது.

இதைடுத்து, பிளாஸ்டிக் மீதான உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் பி.டி.ஆஷா ஆகியோர் அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கின் விசாரணையின்போது, தமிழக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, கருத்துதெரிவித்த நீதிபதிகள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வெளியே சரளமாக கிடைப்பதாகவும், அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குள் பிளாஸ்டிக் பொருட்கள் வருவதை முழுமையாக தடுக்கும் வகையில் எல்லைகளில் சோதனையை தீவிரப்படுத்த வேண்டுமென அறிவுறுத்தினர்

26340cookie-checkகடைகளுக்கு சீல் வைக்கப்படும் உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!