மாநாடு 23 March 2022
ஏற்கனவே கொரோனா ஊரடங்கு காரணமாக பொருளாதாரம் படுபாதாளத்தில் உள்ளது இந்த நிலையில் சிறு குறு தொழில்கள் உள்ளிட்ட அனைத்து தொழில்களுக்கும் பயன்படும் எரிபொருள்களின் விலை கடந்த மூன்று மாதங்களாக ஏறாமல் இருந்தது ஆனால் நேற்று தொடங்கி இன்றும் பெட்ரோல் டீசல் விலைகள் உயர்ந்து இருக்கிறது இதனால் அனைவரும் பேரதிர்ச்சி கொண்டிருக்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல் சமையல் எரிவாயு விலையும் 50 ரூபாய்க்கும் மேல் உயர்ந்து இருப்பது மக்களை பெரும் துன்பத்திற்கு உள்ளாக்கும் பொருளாதாரத்தை சீரழிக்கும் இந்த பெட்ரோல் டீசலின் விலையை சீராக வைக்க வேண்டியது அரசின் கடமையாகும்.
நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக உயராமல் இருந்த நிலையில் நேற்று திடீரென எழுபத்தி ஆறு காசுகள் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சற்றுமுன் வெளியான தகவலின்படி இன்று பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 75 காசுகள் உயர்ந்து உள்ளது என்றும் டீசல் விலை 76 காசுகள் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து இன்று சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.91 எனவும் சென்னையில் இன்று டீசல் விலை ஒரு லிட்டர் விலை ரூபாய் 92.95 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக இரண்டாவது நாளாகவும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளதால் இனி எத்தனை நாளைக்கு உயரும் என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது.