மாநாடு 23 March 2022
அதிமுகவில் உட்கட்சி அமைப்பு தேர்தல் வரும் மார்ச் 27ஆம் தேதி நடைபெற உள்ளதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும், அறிவித்துள்ளனர்.
அதன்படி, அதிமுக அமைப்பு தேர்தல் முதற்கட்டமாக 25 மாவட்டங்களுக்கு மார்ச் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது.ஒன்றியம், நகரம், பேரூராட்சி கழக நிர்வாகிகள், பகுதி கழக நிர்வாகிகளுக்கு நடைபெறவுள்ளது. ராணிப்பேட்டை, வேலூர் மாநகர், புறநகர், திருப்பத்தூர், தி.மலை வடக்கு, தெற்கு மாவட்டங்களுக்கும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் புறநகர், மாநகர், தருமபுரி மாமாவட்டங்களுக்கும், கிருஷ்ணகிரி கிழக்கு, மேற்கு, நாமக்கல், ஈரோடு மாநகர், புறநகர், கிழக்கு மேற்கு மாவட்டங்களுக்கும், திருப்பூர் மாநகர், புறநகர் கிழக்கு, புறநகர் மேற்கு, கரூர், நீலகிரி மாவட்டங்களுக்கும், கோவை மாநகர், புறநகர் வடக்கு, புறநகர் தெற்கு உட்பட அமைப்பு ரீதியாகவுள்ள 25 மாவட்டங்களுக்கு தேர்தல் நடைபெறவுள்ளதாக அதிமுக அறிவித்துள்ளது.