மாநாடு 25 March 2022
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகில் உள்ள சென்னாவரம் கிராமத்தை சேர்ந்தவர் அன்பரசன். இவர் அதிமுக செயலாளர் பொறுப்பில் இருந்திருக்கிறார். அன்பரசனின் மனைவி சில நாட்களுக்கு முன்பு இறந்து விட்டாராம். இதையடுத்து முழு நேரமும் மதுபோதையில் அன்பழகன் இருந்திருக்கிறார்.
இதன் காரணமாக அன்பரசனின் சிறுநீரகத்தில் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இதனால் செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்திருக்கிறார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் திடீரென மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால், செங்கல்பட்டு மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து உடனடியாக செங்கல்பட்டு நகர காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், தற்கொலை செய்துகொண்ட அன்பரசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி எதற்காக தற்கொலை செய்து கொண்டார்.என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எது எப்படியோ திமுகவும் ,அதிமுகவும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் பழியை சுமத்திக் கொண்டு மதுக்கடையை மூடாமல் இருந்ததும், மது குடித்து சிறுநீரகம் சீர் கெட்டுப் போனதும், அதனாலேயே அவர் மருத்துவமனையில் சேர்ந்தார் என்பது மட்டுமே இந்நிகழ்வில் அனைவருக்கும் தெரியவரும் செய்தி.