மாநாடு 28 March 2022
தமிழ்நாட்டில் தற்போது ஆட்சி அமைத்துள்ள திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் வாக்குறுதிகளில் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தார்கள்.அதை வலியுறுத்தி பல்வேறு இடங்களில் இன்றைய முதல்வர் ஸ்டாலின் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதை இதுவரையில் நிறைவேற்றவில்லை அதைப் பற்றிய பேச்சு தமிழக அரசும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களும் ஆட்சி அமைந்தவுடன் பேசவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் போராட்டம் அறிவித்திருந்தது அந்த போராட்டமானது தற்போதைய நிலவரப்படி மிகவும் வெற்றிகரமாகவே தமிழகத்தில் நடைபெற்று வருகிறது மேலும் விிவரமாக அறிவோம்.
நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாள் பொது வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருந்தது. அதன்படி இன்று காலை முதல் நடைபெற்று வருகின்றது.
விலைவாசி உயர்வு கட்டுப்பாடு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல்,பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதையும்,பெட்ரோலிய பொருட்கள் மீதான விலை உயர்வுக்கும் எதிர்ப்பு தெரிவித்து சிஐடியூ,ஏஐடியூசி,யூடியூசி,உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்நிலையில்,தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி 67% பேருந்துகள் ஓடவில்லை என்றும்,33%(5,023) பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டுள்ளதகவும் தமிழக போக்குவரத்துத்துறை தகவல் தெரிவித்துள்ளது.குறிப்பாக,சென்னையில் 3175 பேருந்துகளில் 318 பேருந்துகள்(10.02%) மட்டுமே இயக்கப்படுகின்றன என்று தகவல் வெளியாகியுள்ளது.