மாநாடு 28 March 2022
தஞ்சையில் ரேசன் கடைகள் உள்ளிட்ட பல இடங்களில் மாவட்ட ஆட்சியர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார். அப்போது தஞ்சாவூர் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை கட்டுபாட்டின் கீழ் செயல்பட்டு வரும் வண்டிக்கார தெரு 2-வது ரேசன் கடையில் ஆய்வு செய்தார். அப்போது விற்பனையாளர் தினேஷ் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து தினேசை தற்காலிக பணி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டார்.மேலும் இந்த முறைகேடு தொடர்பாக தஞ்சாவூர் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் தமிழ் நங்கை விசாரணை நடத்தி வருகிறார்.
275330cookie-checkதஞ்சாவூர் ரேஷன் கடை ஊழியர் பணிநீக்கம் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை