தஞ்சை திராவிட முன்னேற்ற கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் டி. கே.ஜி. நீலமேகத்தின் அக்கா மகன் அண்ணா பிரகாஷ் என்பவர் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில தஞ்சாவூர் 16வது வார்டு திமுக சார்பில் போட்டியிட்டு மாமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் தேர்தலில் நிற்க அவர் சமர்ப்பித்த ஆவணங்களில் பல உண்மைகளை மறைத்து விட்டார் என்றும் அவரது தம்பி மாநகராட்சி ஒப்பந்தங்கள் எடுத்து இருந்ததை இவர் அந்த படிவங்களில் கூறவில்லை என்ற காரணத்தால் இவர் தேர்தல் விதியை மீறி விட்டதாக கூறி விளக்கம் தருமாறு தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.அந்த விளக்கம் ஏற்றுக்கொள்ள படும்படி இல்லாததால் இவரின் கவுன்சிலர் பதவியை இழந்துவட்டதாக நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.அது திமுகவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் தஞ்சை மாநகராட்சி 16 வது வார்டு மாமன்ற உறுப்பினர் அண்ணா பிரகாஷ் தனது கவுன்சிலர் பதவியை இழந்துவிட்டார் என்று தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் கொடுத்த ஆணை செல்லாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிகிறது. மன்றக் கூட்டங்களில் கலந்து கொள்ள எந்த தடையும் இல்லை என்றும் கூறப்படுகிறது.