மாநாடு 3 April 2022
காவல் நிலையங்களில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் பிடிபட்டு மீட்கப்படாத இரண்டு சக்கர வாகனங்கள் ,மூன்று சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் ,அவ்வப்போது பொது ஏலம் விடப்படும் அதன்படி இப்போது அறிவிப்பு வந்திருக்கிறது.
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:
திருச்சி மாநகர காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 3 இலகு ரக நான்கு சக்கர வாகனம் மற்றும் 13 இருசக்கர வாகனங்கள் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.
வருகிற 13ந்தேதி காலை 10 மணிக்கு திருச்சி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் ஏலம் நடைபெறும். ஏலம் எடுக்க விரும்புவோர் வருகிற 5ந்தேதி முதல் 12ந்தேதி வரை காலை 10 மணி முதல் 5 மணி வரை மாநகர ஆயுதப் படை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள வாகனங்களை பார்வையிடலாம். ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர் 13ந்தேதி காலை 8 மணிக்கு ஆதார் அட்டையுடன் நேரில் வந்து ரூ.5 ஆயிரம் முன்பணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஏலம் எடுத்த உடன் இரு சக்கர வாகனத்துக்கு ஜி.எஸ்.டி வரி 12 விழுக்காடும், நான்கு சக்கர வாகனத்துக்கு 18 விழுக்காடும் சேர்த்து செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.