மாநாடு 4 April 2022
சென்னை உயர்நீதிமன்றம் இரண்டு மாதங்களில் தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு உத்தரவிட்டதை சுட்டிக்காட்டி தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்த் அவர்கள் தமிழக அரசிற்கு வேண்டுகோள் அறிக்கை விட்டிருக்கிறார் அதில் குறிப்பிட்டிருப்பதாவது:
தமிழகத்தில் சாலையோரம் பார்க்கும் இடமெல்லாம், சீமைக் கருவேல மரங்களைத்தான் காணமுடிகிறது. யாருக்கும் பயனற்ற வகையில், வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றி, நிலம் இல்லாத ஏழை எளிய மக்களுக்கு பயன் அளிக்க கூடிய வகையில், விளை நிலங்களாக மாற்றி, விவசாயத்திற்கு அளித்தால், விவசாயமும் முன்னேற்றம் அடையும்.
சென்னை உயர்நீதிமன்றமே, தமிழகத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான இறுதி கொள்கையை அறிவிக்க தமிழக அரசுக்கு 2 மாதங்கள் அவகாசம் வழங்கியுள்ளதை வரவேற்கிறேன். நீதியரசர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் யாருக்கும் பயனற்ற வகையில் வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றி அனைவருக்கும் பயன் அளிக்க கூடிய விளை நிலங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்