மாநாடு 5 April 2022
கடந்த இரண்டு ஆண்டுகளாக கண்ணுக்குத் தெரியாத உயிரி கொரோனா என்னும் கொடிய நோயால் உலகமே துயரத்தில் இருந்தது. பல உயிர்கள் பலியானது, இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக இயல்புநிலைக்கு திரும்ப மக்கள் போராடி முயற்சித்து வருகிறார்கள்.
இந்நிலையில் அடுத்தவர்களை காரணம் காட்டியே கவர்மெண்டை நடத்துகிறார்கள் என்று பலரும் சொல்வதை மெய்ப்பிக்கும் வகையில் தான் ஒவ்வொரு நிகழ்வும் இந்தியாவில் தமிழகத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு நாளும் பெட்ரோல் டீசல் எரிபொருட்களின் விலை விண்ணை தொடும் அளவுக்கு ஏறிக்கொண்டே இருக்கிறது, தடுக்க வேண்டிய அரசுகள் காரணம் சொல்லிக் கொண்டே இருக்கிறது உக்ரைன் போரால் தான் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்கிறது என்றார்கள்.அது போதாதென்று இப்போது தமிழக அரசு 50 விழுக்காடு முதல் 150 விழுக்காடு வரை மாநகராட்சி ,நகராட்சி பகுதிகளில் குடியிருப்புகளுக்கு வியாபார தலங்களுக்கு, வரிகளை உயர்த்தி இருக்கிறது.ஏற்கனவே கொரோனாவால் அல்லல்பட்டு பிழைத்திருக்கும் மக்களை மீண்டும் அவதிக்குள்ளாக்கும் செயலாக தான் பார்க்கப்பட்டு கண்டனக் குரல்கள் அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல் மனிதநேயமிக்க மனிதர்கள் அனைவரிடமிருந்தும் எழத் தொடங்கியிருக்கிறது.
இந்த வரி விதிப்பால் சொந்த ஊர்களில் வாழாமல் சென்னை போன்ற பெருநகரங்களில் பிழைக்க வந்து வாடகை குடியிருப்பில் வாழ்ந்து வருபவர்களை நொந்து போக வைக்கும் செயல் தான் இந்த வரி ஏற்றம்.இதனால் அவர்களின் வீட்டு வாடகை உயரும் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். என்பதை உணர்ந்து தான் அனைவரும் கண்டனங்கள் எழுப்பி வருகிறார்கள்.
அதன் ஒரு பகுதியாக இன்று அதிமுக சார்பாக வரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. தஞ்சாவூரில் அண்ணா சாலையில் அமைந்துள்ள பனகல் கட்டிடம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் ஆர். வைத்தியலிங்கம் தலைமை தாங்கினார்.ஆர்ப்பாட்டத்திற்கு பல்வேறு ஊர்களிலிருந்தும் மக்கள் வந்திருந்தனர். இந்த ஆர்ப்பாட்டம்10.30க்கு தொடங்கி11.30வரை ஒரு மணி நேரம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 1200 பேர் கலந்து கொண்டார்கள் அதில் 150 பேர் பெண்கள்.
2018 இல் அதிமுக வரியை உயர்த்தியபோது தற்போதைய தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின் சொத்துக்கு வரியா அல்லது சொத்தைப் பறிக்க வரியா என்கிற முழக்கத்தோடு போராட்டத்தை முன்னெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.