Spread the love

மாநாடு 6 April 2022

தமிழ் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு நடுவே விஜய் நடித்து இந்த மாதம் வெளிவர இருக்கும் பீஸ்ட் திரைப்படத்தை இப்படி எடுத்திருந்தால் விஜயின் வீடு முற்றுகை இடப்படும் விஜய் மீதும் இயக்குனர் மீதும் வழக்கு தொடருவோம் என்று தடா ரஹீம் பரபரப்பு அறிக்கை வெளியிட்டிருக்கிறார் அதில் கீழ்கண்டவாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது.

துப்பாக்கி திரைப்படத்தில் உயர்நீதிமன்றம் மூலம் வாங்கிய செருப்படி நடிகர் விஜய் மறந்து இருக்க வாய்ப்பில்லை பீட்ஸ் திரைப்படமும் துப்பாக்கி திரைப்படம் போல இருந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக  எச்சரிக்கிறோம்..

துப்பாக்கி திரைப்படத்தில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக , பயங்கரவாதிகளாக சித்தரித்து எடுக்கப்பட்ட திரைப்படத்தை சுமார் மூன்று முறை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மினி திரையரங்கில் நீதியரசர்கள் ஆர். பானுமதி மற்றும் கே.கே.சசிதரன் ஆகியோர் பார்வையிட்டனர்

இது போன்ற மாஸ் ஹிரோ நடிக்கும்  திரைப்படங்களில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை காயப்படுத்தும் காட்சிகள் இருப்பது கண்டிக்கதக்கது..

திரைப்பட தனிக்கை குழு எப்படி இதுபோன்ற திரைப்படம் எடுக்க அனுமதி அளித்தது என்று கேள்வி எழுப்பினார்கள் நீதியரசர்கள் என்பது குறிப்பிடத்தக்கது  ..

இந்நிலையில் பீஸ்ட் திரைப்படம் வெளியாக உள்ளது இப்படம் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் வகையில் உள்ளதாக குவைத் நாடு தடை விதித்து உள்ளதாக செய்திகள் வருகிறது  ..

காவியை கிழிப்பது போன்ற காட்சி திரைப்பட முன்னோட்ட காட்சிகளில் வைத்து விட்டு இப்போது முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் காட்சிகள் அமைத்து இருப்பது கண்டிக்கதக்கது ..

ஏற்கனவே இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக துப்பாக்கி திரைப்படத்தை தடை விதிக்க வேண்டும் என நடிகர் விஜய் வீடு முற்றுகை போராட்டம் நடத்தினோம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்து இயக்குனர் நடிகர் ஆகியோர் கண்டனத்திற்கு ஆளாகின்றனர் என்பதை மறந்து மீண்டும் முஸ்லிம்களை குறி வைத்து தீவிரவாதிகளாக காட்சிகள் அமைத்து திரைப்படம் எடுத்து உள்ளதை இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்  …

பீட்ஸ் திரைப்படம் வெளியான பிறகு திரைப்படத்தை பார்த்து முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து இருந்தால் நடிகர் இயக்குனர் ஆகியோர் மீது வழக்கு தொடுப்பதும் , விஜய் வீடு முற்றுகை போராட்டம் நடத்தவும் இந்திய தேசிய லீக் கட்சி தயாராக உள்ளது ..

அன்புடன்
தடா ஜெ அப்துல் ரஹீம்
இநதிய தேசிய லீக் கட்சி
மாநில தலைவர்

29040cookie-checkபீஸ்ட் பட இயக்குனருக்கும் விஜய்க்கும் எச்சரிக்கை தடா ரஹீம் பரபரப்பு அறிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!