Spread the love

மாநாடு 12 April 2022

நடிகர் சிம்பு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கிறார் அந்தக் கூட்டமானது வெற்றியிலும் தோல்வியிலும் சிம்புவை கைவிடாமல் கூடவே இருக்கிறது சாதாரணமாகவே சிம்பு எது செய்தாலும் அது சர்ச்சையாகி பரபரப்பு உண்டாகும் அது போலவே நடிகர் சிம்பு தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் #TamilConnect என்ற ஹேஸ்டாக்கில் ‘ தமிழால் இணைவோம் என பதிவிட்டுள்ளது இணையத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.அதே போல் இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் அதே ட்விட்டை பதிவிட்டுள்ளார்.

அண்மையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தியை தேசிய மொழியாக்க வேண்டும். ஆங்கிலத்துக்கு மாற்று மொழியாக இந்தியை கொண்டு வர வேண்டும் என பேசியது பெரும் சர்ச்சைகளை கிளப்பியது. அவரின் இந்த பேச்சிற்கு எதிராக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், தனது சமூக வலைதளத்தில் தமிழன்னையின் ஓவியத்தைப் பகிர்ந்து ’தமிழணங்கு’ என பதிவிட்டிருந்தார். மேலும் பேட்டி ஒன்றில் தமிழ் தான் இணைப்பு மொழி என்றும் தெரிவித்திருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவு தெரிவித்தே சிம்பு, அனிருத் தங்களின் ட்விட்டர் பக்கங்களில் ‘தமிழால் இணைவோம்‘ என பதிவிட்டுள்ளதாக இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ஆனால், அண்மையில் சிம்பு ஆஹா ஓடிடி தளத்தின் பிராண்ட் அம்பாசிடராக இணைந்துள்ளதாகக் கூறப்பட்டது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்ற தகவலும் வெளியானது. இது சம்பந்தமான புரோமோஷனுக்காக சிம்பு, அனிருத் இருவரும் ‘தமிழால் இணைவோம்’ என பதிவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆஹா ஓடிடி தளம் தமிழில் பல வெப் சீரிஸ் மற்றும் நேரடி படங்களை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது

30270cookie-checkதமிழால் இணைவோம் இணையத்தில் கலக்கும் சிம்பு ட்வீட்

Leave a Reply

error: Content is protected !!