Spread the love

மாநாடு 15 April 2022

பீஸ்ட் படத்தை தடை செய்ய வேண்டும் என திமுக கூட்டணி கட்சியான மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா முதல்வருக்கு கடிதம் எழுதி உள்ளார். பீஸ்ட் படத்தை முதல்வரின் குடும்பத்தைச் சேர்ந்த சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் கடந்த 13ந்தேதி வெளியானது. இந்த படத்தில் விஜய், இந்தி வில்லனிடம் தமிழ் கத்துக்கிட்டு வந்து தமிழில் பேசு என வசனம் பேசும் காட்சி வைரலான நிலையில், இந்த படம், தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் வெளியாகியுள்ளது .

இந்த நிலையில், பீஸ்ட் படத்தில், முஸ்லிம் சமுதாயத்தை சிறுமைப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறி பீஸ்ட் படத்தை தடை செய்ய வேண்டும் என தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார். ஏற்கனவே சில முஸ்லிம் அமைப்புகள் இந்த படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில் தற்போது ஜவாஹிருல்லாவும் போர்க்கொடி தூக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம், அதை குலைப்பதற்காகவும், தங்களின் அரசியல் பிழைப்பிற்காகவும் மதவாத பாசிஸ்டுகள், அரசுக்கு பல்வேறு இடையூறுகளையும் சமூகத்தில் பல குழப்பங்களையும் ஏற்படுத்தி வருகின்றனர். திரையுலகையும் இந்த தீயோரின் களமாக மாற்றும் முயற்சிகள் நெடுங்காலமாகவே நடந்து வருகின்றன.

விஸ்வரூபம், துப்பாக்கி உள்ளிட்ட பல திரைப்படங்கள் முஸ்லிம் சமுதாயத்தை இழிவுபடுத்தும் நோக்கோடு எடுக்கப்பட்டு பெரும் குழப்பங்களுக்கு வித்திட்டன. முஸ்லிம் சமுதாயமே பயங்கரவாத சமுதாயமாக மேற்கண்ட படங்களில் காட்டப்பட்டன. இடைக்காலத்தில் சிறிது நின்றிருந்த இந்த இழி செயலுக்கு தற்போது பீஸ்ட் என்ற படத்தின் மூலம் புத்துயிர் ஊட்டப்பட்டு உள்ளது.

குவைத் மற்றும் கத்தார் நாடுகளில் இப்படம் தடை செய்யப்பட்டுள்ளது. மனிதநேயப் பணிகளிலும், பேரிடர் கால மீட்புப் பணிகளிலும் தம் இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் முன்னணியில் நிற்கும் முஸ்லிம் சமுதாயத்தை சிறுமைப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள பீஸ்ட் திரைப்படத்தை தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க அமைதியின்மையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

எனவே மாண்புமிகு முதல்வர் அவர்கள் பீஸ்ட் திரைப்படத்தை திரையிட தடை விதிப்பதோடு, வெறுப்பு அரசியலைத் தூண்டும் படங்களை யார் எடுத்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம் என்று கடிதத்தில் எழுதியுள்ளார்.

இவர் தடை செய்ய சொல்லியுள்ள அந்த பீஸ்ட் படத்தை திரை அரங்குகளில் பெரும்பாலானோர் பார்த்துவிட்டனர்.ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என்று கூறப்படுகிறது. அதன்காரணமாக தானாகவே திரையரங்கில் இருந்து படம் எடுக்கப்பட்டு விடும்.

எனவே ஜவாஹிருல்லா அவர்கள் முதல்வருக்கு வைக்கவேண்டிய கோரிக்கை யாரெனில் இனியாவது சன் பிக்சர்ஸ்ம் திமுகவை சேர்ந்த எந்த நிறுவனமாக இருந்தாலும் இது போன்ற கதை அம்சங்களை படமாக எடுக்கக்கடாது.தங்களது தொலைக்காட்சிகளில் வெளியிடவும் கூடாது ,என்று கோரிக்கை வைத்திருக்க வேண்டும் எனவும் கூடுதலாக பீஸ்ட் படத்தை எந்த தொலைக்காட்சிகளும் திரையிடக்கூடாது என்றும் திமுக குடும்ப தொலைக்காட்சியான சன் டிவியிலும், கலைஞர் டிவியிலும், வெளியிடவே கூடாது என முதல்வருக்கு கோரிக்கை வைத்திருக்க வேண்டும் என்று நடுநிலையாளர்கள் கூறுகிறார்கள்.

30840cookie-checkபீஸ்ட் படத்தை தடை செய்ய வேண்டும் என்று மேலும் ஒரு இஸ்லாமிய அமைப்பு போர்க்கொடி தூக்கியுள்ளது

Leave a Reply

error: Content is protected !!