Spread the love

மாநாடு 7 May 2022

தேர்தலின்போது திமுக அளித்த 500 வாக்குறுதிகளில் 200 வாக்குறுதிகளுக்கு மேல் நிறைவேற்றப்பட்டு விட்டதாக ஸ்டாலின் சொல்லிக் கொண்டிருந்தாலும் குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை, நகை கடன் தள்ளுபடியில் குளறுபடி தேர்தலின் போது அளித்த முக்கிய வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்று அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து ஒரு ஆண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சென்னை மெரினாவில் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செய்தார்.

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்றது., திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தது. கடந்த மே மாதம் 7ஆம் தேதி தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார்.

இதனையொட்டி முதல்வர் ஸ்டாலினுக்கு கூட்டணி கட்சியினர் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இன்று காலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மரியாதை செலுத்தினார். முன்னதாக கருணாநிதி வாழ்ந்து வந்த கோபாலபுரம் வீட்டுக்கு சென்றார். அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.தொடர்ந்து, கோபாலபுரம் இல்லத்தில் தாயார் தயாளு அம்மாளிடமும் வாழ்த்து பெற்றார்.பிறகு சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்திற்கு சென்று அங்குள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

அதனை தொடர்ந்து மு.க,ஸ்டாலின் ஓராண்டு சாதனை புத்தகத்தை வெளியிட்டார். திமுக ஆட்சியில் மாதம் தோறும் செய்த சாதனைகளை 12 புத்தகங்களாக முதல்வர் வெளியிட்டார்.

தமிழ்நாட்டில் இருக்கின்ற குறைகளை நீக்கி மக்களின் ஆட்சியாக மக்களுக்கான ஆட்சியாக மீதமுள்ள நான்கு ஆண்டும் செயல்பட மக்களின் சார்பாக மாநாடு இதழ் வாழ்த்துகிறது.

33930cookie-checkதிமுகவின் ஓராண்டு நிறைவு விழா கொண்டாட்டம்

Leave a Reply

error: Content is protected !!