மாநாடு 23 May 2022
சேலம் மாவட்டம் மல்லூர் கிராமத்தில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்காக 100 ஆண்டுகள் பழமையான 7 புளிய மரங்களை வெட்டுவதற்கான அனுமதி கேட்டு நெடுஞ்சாலை துறைக்கு கடிதம் அனுப்பியிருந்தது மல்லூர் பஞ்சாயத்து நிர்வாகம்.
அந்த மரங்களை காக்கும் நோக்கில் சேலம் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி ரஞ்சித் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: மல்லூர் கிராமத்துக்கு அருகிலேயே தேசிய நெடுஞ்சாலையில் புறவழிச்சாலை உள்ளதால் அதையே அனைத்து வாகனங்களும் பயன்படுத்திக்கொள்கின்றன ,அப்படி இருக்கும் போது புதிதாக இந்த பகுதியில் இந்த மரங்களை வெட்டி விட்டு புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டிய தேவை இல்லை. 100 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் இந்த மரங்களால் போக்குவரத்துக்கு எந்தவித இடையூறும் இல்லை என்பதால் இந்த மரங்களை வெட்ட தடை விதிக்க வேண்டும் என்று அம்மனுவில் குறிப்பிட்டிருந்தார் .
இந்த வழக்கு நீதி அரசர் ஜி.ஆர். சாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது அப்போது மனுதாரர் சார்பில் மரங்களை வெட்டாமல் பேருந்து நிலையம் அமைக்க முடியும் மரங்களை வெட்ட நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது வாதங்களை கேட்ட நீதி அரசர் மரங்களை வெட்ட கோட்டாட்சியர் அனுமதிக்கக்கூடாது என்று உத்தரவிட்டார் .
மேலும் சேலம் மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர், நெடுஞ்சாலைத்துறை, மல்லூர் பஞ்சாயத்து செயல் அலுவலர், ஆகியோர்கள் மனுவில் பதில் அளிக்குமாறு உயர்நீதிமன்ற நீதியரசர் கூறினார்.