மாநாடு 1 June 2022
கடந்த 12 ஆண்டுகளாக எந்தவித சமரசமும் இன்றி தமிழகத்தில் அனைத்து பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்து ,மக்களோடு மக்களாக தோள்கொடுத்து நிற்கின்ற கட்சி நாம் தமிழர் கட்சி. அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்சி துவங்கியபோது மதுரையில் சூளுரைத்த படி எந்த தேசிய கட்சிகளோடும் ,திராவிட கட்சிகளோடும், கூட்டணியை அமைக்காமல் தங்களது கட்சியின் தம்பிகளை உறவுகளை எவரிடத்திலும் அடகு வைக்காமல் இத்தனை ஆண்டுகளாக எந்த வித சமரசமும் செய்துகொள்ளாமல் நாம் தமிழர் கட்சியை நடத்தி வருகிறார்.
சிலர் அவ்வப்போது தூற்றினாலும் தனது செயல்களின் மூலம் பதில் அளித்து தூற்றியவர்களே போற்றும்படியாக சிறந்து விளங்கி வருகிறார். இவரது கருத்தியலை எதிர்கொள்ள முடியாத பொறாமை எண்ணம் கொண்டவர்கள் அவ்வப்போது பொரளி பேசிக் கொண்டிருந்தாலும் கூட அவர்கள் மேலும் அக்கறை கொண்டு அவர்களுக்காகவும் குரல் கொடுத்து வருவதை அனைவரும் அறிவோம்.
ஆணுக்கு பெண் சம உரிமை வேண்டும் என்று போராடி கொண்டிருந்தவர்கள் மத்தியில் ஆணும் பெண்ணும் சமம் என்று சட்டமன்ற தேர்தலிலும் ,பாராளுமன்ற தேர்தலிலும், போட்டியிட சம வாய்ப்பை கொடுத்து பாலின வேற்றுமையை கலைந்த முதல் கட்சி நாம் தமிழர் கட்சி என்கிற பெருமையையும் பெற வைத்தவர் சீமான் அதுமட்டுமல்லாமல் தேர்தல் ஆணையமே குறிப்பிட்டு சொல்கிறபடி குற்றமற்ற வேட்பாளர்களை நிறுத்திய ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி என்கிற பெருமையும் சீமானையே சேரும்.
இவ்வாறாக திறம்பட தனது கட்சியை நடத்தி வருகின்ற போதிலும் நாளுக்கு நாள் கட்சியின் வளர்ச்சி, உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும் சில இடங்களில் ,சில நேரங்களில் தவறானவர்கள், மாவட்ட நிர்வாகிகளின் பரிந்துரையால் பொறுப்புகளில் வருவதை தவிர்க்க முடியாததாகி விடுகிறது,
இவர்கள் தவறானவர்கள் என்று சீமான் அவர்களுக்கு தெரிந்து விட்டால் அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் கூட அடுத்த நொடியே அத்தனை பொறுப்புகளையும் பறித்துக்கொண்டு கட்சியை விட்டு நீக்கி தவறானவர்களுக்கு நாம் தமிழர் கட்சியில் எந்த வேலையும் இல்லை என்று வெளியே அனுப்பி விடுவார்.
இதுபோல பல நேரங்களில் நடந்து இருக்கின்றது. அதேபோல ஒரு நிகழ்வு இப்போது நடந்திருக்கின்றது. அதனைப் பற்றி தம்பி ஒருவர் கூறும்போது: புதுக்கோட்டை பகுதியில் கட்சியில் பொறுப்பில் இருப்பவர் மாற்று கட்சியினரின் தவறான வழிகாட்டுதலால் கட்சி நிர்வாகிகள் யாருக்கும் தெரியாமல் கட்சிக்கு விரோதமாக நடந்திருக்கிறார், இந்த செய்தி அண்ணனுக்கு இன்று தான் மதியம் 1 மணி அளவில் தெரியப்படுத்தினோம் உடனடியாக விசாரணை செய்து அந்த நபர் பிழையான நபர் என்று தெரிந்தவுடன் 2 மணிக்கு கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து அண்ணன் சீமான் அவர்கள் அவரை நீக்கிவிட்டார். இதன்படி சொல்லுக்கு முன் செயல் என்று தான் பேசிவிட்டு செல்பவர் அல்ல நடவடிக்கையிலும் எங்கள் அண்ணன் சீமான் அப்படி தான் என்று மீண்டும் ஒரு முறை தனது செயல்பாட்டின் மூலம் காட்டிவிட்டார். இது போன்ற செயல்கள் எங்கு நடந்தாலும் கட்சியில் எந்த பொறுப்பில் இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க எங்கள் அண்ணன் சீமான் தயங்கமாட்டார். ஏனெனில் பறவைகள் எந்த கிளைகளையும் நம்பி உட்காருவது இல்லை பறவைகள் தனது சிறகுகளை நம்பியே உட்காருகிறது அதே போல தான் சீமானும் எவரை நம்பியும் இந்த கட்சியை ஆரம்பிக்கவில்லை என்றார் . மேலும் இந்த நடவடிக்கையால் அந்த பிழையான நபரால் பாதிப்புக்குள்ளாக இருந்த மாற்றுக் கட்சியினரும் மனம் மகிழ்ந்து நாம்தமிழர் கட்சியையும் சீமான் அவர்களையும் பாராட்டுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.