மாநாடு 4 June 2022
கடந்த மே மாதம் முதல் வாரம் 10, 11, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற்றது. தேர்வு தொடங்கிய நாள் முதலே தினமும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பரீட்சைக்கு வராமல் இருந்தார்கள்.
இந்த தகவலை அரசுத் தேர்வுத்துறை தினந்தோறும் வெளியிட்டு வந்தது. அதன்படி நடைபெற்ற பொதுத் தேர்வுகளில் 6 லட்சத்து 70 ஆயிரம் பேர் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பள்ளிகள் சரிவர இயங்காத சூழ்நிலை நிலவியது அதனால் மாணவர்களுக்கு கற்றல் திறன் தடைபட்டது, அதனால் பொதுத்தேர்வை எதிர்கொள்ள மாணவர்களுக்கு அச்சம் ஏற்பட்டிருக்கிறது என்றும் அதனால் தான் தேர்வுக்கு மாணவர்கள் வரவில்லை என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் உள்ள புதுக்கல்லூரியில் சிலம்பப் போட்டியை துவக்கி வைப்பதற்காக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வருகை தந்திருந்தார் அங்கு பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது
முதல்வர் அரசு துறைகளில் விளையாட்டு போட்டிக்கான இட ஒதுக்கீட்டில் சிலம்பப் போட்டிக்கு 3 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்கியிருக்கிறார் பாரம்பரிய கலையான சிலம்ப விளையாட்டு கலையை ஊக்கப்படுத்துவதற்காக இவ்வாறு செய்திருக்கிறார் மேலும் சிலம்பக் கலையின் வரலாற்றை அரிய தனிக்குழு அமைத்து உள்ளார்.
மேலும் விளையாட்டை ஊக்கப்படுத்துவதற்காக முதலமைச்சர் 4 இடங்களில் ஒலிம்பிக் கமிட்டி அமைத்திருக்கிறார், சென்னைக்கு அருகில் விளையாட்டு நகரம், செஸ் ஒலிம்பியா போட்டி என பல திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார்.
மேலும் 6 லட்சத்து 70 ஆயிரம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதாதற்கான காரணத்தை ஆய்வு செய்து வருகிறோம் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு சிறப்பு தேர்வுகள் நடைபெறும் அவற்றில் விடுபட்ட அனைத்து மாணவர்களையும் தேர்வு எழுத வைக்கும் அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறோம் என்றார்.