மாநாடு 6 June 2022
சென்னை மணலி பகுதியைச் சேர்ந்த பாக்யராஜ் என்பவருடைய மனைவி 29 வயதுடைய பவானி இவர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது,
இவர்களுக்கு அழகான இரண்டு குழந்தைகள் இருக்கிறது பவானி சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்திருக்கிறார். இந்நிலையில் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தகவலறிந்து மணலி புதுநகர் காவல் நிலையத்தை சேர்ந்த காவலர்கள் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி உள்ளனர்.
நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் புது நகரில் இருந்து கந்தன்சாவடி வரை ரயிலில் தனது வேலைக்காக செல்லும்போது பவானி அந்த நேரங்களில் ஆன்லைனில் ரம்மி விளையாடுவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார், அதன் காரணமாக பலரிடமும் கடன் வாங்கி ரம்மி விளையாடியிருக்கிறார், அதுமட்டுமல்லாமல் 20 பவுன் தங்க நகைகளையும் விற்று ஆன்லைனில் ரம்மி விளையாடி பணத்தை இழந்து இருக்கிறார் .மேலும் தனது தாய் சகோதரி ஆகியோர்களிடமும் தலா ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் என இருவரிடமும் 3 லட்சம் ரூபாய் பணம் வாங்கி அதையும் இழந்திருப்பது காவல்துறையின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் மட்டுமே ஆன நிலையில் இவ்வாறான தற்கொலை சம்பந்தமும் நடந்திருப்பதால் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்துவார் என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இரண்டு குழந்தைக்கு தாயான இளம்பெண் ஆன்லைன் ரம்மி விளையாட்டின் மூலம் பணம் இழந்து, மனம் உடைந்து குழந்தைகளை தவிக்கவிட்டு செத்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரசு நினைத்தால் ஆன்லைன் விளையாட்டுக்களை நிறுத்தி பல குழந்தைகளையும், குடும்பத்தையும் காக்க முடியும். அரசு நினைக்குமா? குடும்பத்தை காக்குமா ?