மாநாடு 22 June 2022
இந்திய ஜனநாயக கட்சி ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் சார்பில் இன்று காலை 10 மணி அளவில் தஞ்சாவூர் ரயிலடி முன் அனைத்து வகையான ஆன்லைன் சூதாட்டங்களையும் தடை செய்ய வேண்டும்,பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கு மாவட்ட தலைவர் ச.சிமியோன் சேவியர் ராஜ் தலைமையில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் பி.எஸ்.திருமாறன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் இவ்வாறு பேசினாரார்கள்.
தமிழ்நாட்டில் வெளிப்படையாக சூதாட்டங்கள் தடை செய்யப்பட்டிருந்தாலும் ஆன்லைன் மூலமாக ரம்மி ,லாட்டரி உள்ளிட்ட பல்வேறு வகையான உள்நாட்டு ,வெளிநாட்டு சூதாட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வேலை கிடைக்காமல் கஷ்டத்தில் இருக்கின்ற இளைஞர்களும், வருவாய் போதாத குடும்பங்களும் மற்றும் பல்வேறு தரப்பினரும் சூதாட்டத்தால் கவரப்பட்டு தங்களது உடைமைகளை இழந்து பெரும் கடனாளியாகி அச்சப்பட்டு தற்கொலை செய்து கொள்வது சமீபகாலமாக பெரிய அளவில் பரவி வருகிறது .
நாட்டின் எதிர்காலம் கருதியும், சமூக நலன் கருதியும் உடனடியாக தமிழ்நாடு அரசு அனைத்து வகையான ஆன்லைன் சூதாட்டங்களையும் தடை செய்ய வேண்டும், ஒன்றிய அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிவிட்டது , நாளுக்கு நாள் உணவு சமையல் உள்ளிட்ட பொருட்களும் விலை உயர்ந்து வருகிறது, மற்றும் பெட்ரோல் , டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வினால் ஏழை எளிய நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். சிறு குறு தொழில்கள் நசிந்து வருகின்றன. உடனடியாக ஒன்றிய அரசு பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்,
எக்காரணம் கொண்டும் மேகதாது அணையை கர்நாடக அரசு காவிரி ஆற்றில் கட்டக்கூடாது என்றும், அறிஞர் அண்ணா குருங்குளம் சர்க்கரை ஆலையில் விவசாயிகளுக்கு பல ஆண்டுகளாக பாக்கி வைத்திருக்கின்ற கரும்பு நிலுவைத் தொகை 21 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், இனி வரும் காலங்களில் உடனுக்குடன், அவ்வப்போது கரும்பு தொகையை வழங்க வேண்டும், பருவத்திற்கு முன்னதாகவே இந்த ஆண்டு டெல்டா மாவட்டத்தில் விவசாயம் நடைபெற்று வருவதால், விவசாயத்திற்குத் தேவையான உரம், விதை மற்றும் இடுபொருட்கள் தட்டுப்பாடின்றி, குறைந்த விலையில் கிடைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் குணசேகரன் ,வினோபா கணேசன்,டொமினிக், முத்துகிருஷ்ணன், ராஜகோபால், முருகானந்தம், சீதாலட்சுமி ,ஜேசுராஜ், ஸ்டீபன் , சித்திரவேல், அடைக்கலசாமி, கவியரசன் , முத்தமிழ்செல்வன், வழக்கறிஞர் காசி. ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில் மாநகர தலைவர் அ.ஜஸ்டின் நன்றி கூறினார்.