Spread the love

மாநாடு 22 June 2022

அன்றாடம் திரும்பும் இடங்களில் எல்லாம் விலைவாசி உயர்வு, அக்னிபாத் பிரச்சனை போன்ற பல பிரச்சனைகளை முன்வைத்து ஆளும் கட்சிகளுக்கு கண்டனங்கள் தெரிவித்து, பிரச்சனைகளை சுட்டிக்காட்டி, மக்களுக்காக உழைக்கும் கட்சிகள் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆளும் கட்சிக்கு தமிழ் நாட்டின் எதிர்க்கட்சியாக இருக்கின்ற அதிமுகவும் கடந்த சில நாட்களாக போராடி வருகிறது. அதிமுகவின் போராட்டம் எதை நோக்கி என்றால் அதிமுகவிற்கு ஒற்றை தலைமை வேண்டுமா? இரட்டை தலைமை வேண்டுமா ? என்று ஓபிஎஸ் ஒரு அணியாகவும், இபிஎஸ் ஒரு அணியாகவும், பிரிந்து நின்று அதிகாரத்தை யார் கைப்பற்றுவது என்ற பல பலப்பரீட்சையில் இறங்கி இருக்கிறார்கள்.

இதில் ஒற்றை தலைமைதான் வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பல மாவட்ட செயலாளர்கள் இருப்பதாகவும் நாள்தோறும் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஆதரவுகள் பெருகி வருவதாகவும் தெரிய வருகிறது.

மற்றொரு பிரிவுக்கு தலைமை தாங்கும் ஓ.பன்னீர்செல்வம் இரட்டை தலைமைதான் அதிமுகவுக்கு வேண்டுமென்ற நிலைப்பாட்டை ஆதரித்து அவருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சரும் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டைச் சேர்ந்த ஆர். வைத்தியலிங்கம் இருக்கிறார்.

இந்த நிலையில் ஓபிஎஸ் தரப்பு எப்படியாவது நாளை 23ஆம் தேதி சென்னையில் வானகரத்தில் நடக்க இருக்கின்ற பொதுக்குழுவை தடுத்து நிறுத்துவதற்கான அனைத்து வேலைகளையும் செய்து வந்தன. அதன்படி நாளை பொதுக்குழு நடைபெற்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே பொதுக்குழு நடைபெறுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று காவல்துறை ஆணையருக்கு மனு அளிக்கப்பட்டிருந்தது அதுவும் இன்று நிராகரிக்கப்பட்டது.

அதேபோல நாளை நடைபெற இருக்கின்ற அதிமுக பொதுக் குழுவிற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடரப்பட்ட வழக்கு இன்று இரவு 8.30 மணி அளவில் தள்ளுபடி செய்யப்பட்டது. இவர்கள் தரப்பு மேல்முறையீட்டுககு சென்றிருக்கிறது, இந்த வழக்கு இன்று இரவு இன்னும் சற்று நேரத்தில் விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல பொதுக் குழுவிற்கு தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டிருந்த வழக்கில் பொதுக்குழுவை திட்டமிட்டபடி நாளை நடத்தலாம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதனால் குறிப்பிட்டபடி நாளை சென்னை வானகரத்தில் அதிமுகவின் பொதுக்குழு நடைபெறும் என்று தெரிய வருகிறது.

இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக பெரும்படையை திரட்டி டெல்டா மாவட்டங்களில் வலிமை சேர்க்க காரணமாக இருந்தவர் முன்னாள் அமைச்சரும், திருவாரூர் மாவட்ட செயலாளருமான ஆர்.காமராஜ் என்று தெரிய வருகிறது.

அவர் வழிகாட்டுதல்படி திருவாரூர் மாவட்ட அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு கூட்டம் திருவாரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் சின்ராஜ் தலைமையில் நடைபெற்றது ,இதில் ஒருமனதாக எடப்பாடி பழனிச்சாமியை ஆதரிப்பது என்று தீர்மானம் செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் இந்த ஒற்றை தலைமை பிரச்சனை ஆரம்பித்ததில் இருந்தே முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் சொந்த மாவட்டமான தஞ்சாவூர் பகுதியில் அதிக ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்கு

இருந்து வந்தது. இதன் காரணமாக வைத்தியலிங்கத்தின் வலதுகரம் இடது கரம் என்று சொல்லப்பட்டவர்களும் கூட எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து தஞ்சை நகரில் போஸ்டர்கள் ஒட்டியும்,

சென்னைக்கு நேரடியாக சென்று தங்களது ஆதரவை முழுமையாக எடப்பாடி பழனிச்சாமிக்கு கொடுப்பதுமாக இருந்து வருகிறார்கள்.

அதிமுகவில் மிகவும் செல்வாக்கில் இருந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் திடீரென இவரின் எதிர் தரப்பான எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக களம் இறங்குவதற்கான காரணம் என்னவென்று அதிமுகவில் சிலரிடம் பேசினோம் அவர்கள் கூறியதாவது: முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தன்னை மீறி யாரும் செல்வாக்காக வளர்வதை அவர் விரும்பமாட்டார் அனைவரும் தன் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும் என்று நினைப்பார் அதை மீறி யாராவது வளர்ந்துவிட்டால் அவர்களை ஓரங்கட்டி விடுவார். அதுமட்டுமல்லாமல் தனது மூத்த மகன் பிரபு அரசு ஒப்பந்தங்களை எடுத்து செய்து வருவதால் திமுகவின் அமைச்சர்கள் பலரோடும் நெருக்கம் காட்டி வந்தார், கட்சியில் கட்சிக்காரர்களுக்கு எது நடக்க வேண்டும் என்றாலும் அவரின் சம்மந்தி தவமணியை அணுகி தான் கேட்க வேண்டும், இது பலரையும் அதிருப்தியில் வைத்திருந்தது அதுமட்டுமல்லாமல் எடப்பாடி பழனிச்சாமியிடமும், வேலுமணியிடமும், தொடர்பில் இருந்தார் என்ற ஒரே காரணத்திற்காக

மருத்துவக்கல்லூரி பகுதி செயலாளர் சரவணனை ஓரம் கட்டினார் கட்சிப் பொறுப்பில் இருந்து வைத்திலிங்கம் தூக்கினார். இதுபோன்ற செயல்களால் அவர் மீது அதிருப்தி கொண்ட ஒரு குழுவே உருவாகியது, இந்த நேரத்தில்தான் ஒற்றை தலைமை பிரச்சனை விசுவரூபம் எடுத்தது. எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் தங்களது ஆதரவை தெரிவிக்க நேரடியாக எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.

வைத்தியலிங்கத்தின் சொந்த மாவட்டமான தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களில்  வைத்தியலிங்கத்தின் ஆதரவாளர்களாக இருந்தவர்களில் பலர் தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக நிற்கிறார்கள்.

குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில் அம்மா பேரவை மாநில இணை செயலாளரான காந்தி, முன்னாள் மருத்துவக் கல்லூரி பகுதி கழக செயலாளர் சரவணன், மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கு.தங்கமுத்துவின் மகன் டாக்டர் கண்ணன்,

கு.தங்கமுத்துவின் தம்பி ராஜமாணிக்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சி.வி.சேகர், ராமநாதன், பேராவூரணி தெற்கு ஒன்றியச் செயலாளரான இளங்கோ உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவித்து தஞ்சையில் தனக்கிருந்த ஆதரவாளர்களையும் இழந்தார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

39710cookie-checkதஞ்சாவூரில் தனது ஆதரவாளர்களை ஏன் இழந்தார் வைத்தியலிங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!