மாநாடு 24 June 2022
சென்னையில் சர்வ சாதாரணமாகவே போக்குவரத்து நெரிசல்கள் அதிகமாக இருக்கும். அதிலும் காலை, மாலை வேளைகளில் பள்ளிக்கூடங்களுக்கு செல்பவர்களும், கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகளும், பணிகளுக்குத் செல்பவர்களும், இதனால் பெரும் அவதிக்குள்ளாவார்கள் இவர்களின் கஷ்டத்தை குறைத்து போக்குவரத்தை சரி செய்து பாதுகாப்பாக இவர்கள் பயணிப்பதற்கு பக்கத் துணையாக இருப்பவர்கள் போக்குவரத்து காவலர்கள் தான். போக்குவரத்து காவல்துறையினர் இல்லாமல் ஒரு நாள் சென்னை சாலையில் சரியாக யாரும் பயணிக்க முடியாது என்பதுதான் நிதர்சனம்.
நிலை இப்படி இருக்க சென்னை முக்கிய சாலையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்தப் பகுதியில் போக்குவரத்து காவலர்கள் சமீபகாலமாக தினமும் பணியில் இல்லை என்று பொதுமக்களால் கூறப்படுகிறது .இதனால் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பயணிகள் அல்லல் படுகிறார்களாம். போக்குவரத்து நெரிசல்கள் அதிகம் ஏற்பட்டு விட்டால் சாலையில் பயணிக்கும் பயணிகளே வீதியில் இறங்கி நின்று போக்குவரத்தை சரி செய்வார்களாம்.
சமீபத்தில்தான் இந்த சாலைக்கு பெயர் மாற்றமும் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாலை முன்பு மேடவாக்கம் சோழிங்கநல்லூர் சாலை என்று அழைக்கப்பட்டது .தற்போது செம்மொழி சாலை என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது இந்த சாலையில் அமைந்துள்ளது தான் பெரும்பாக்கம்.
இந்த பெரும்பாக்கம் சந்திப்பில் தினமும் காலையில் போக்குவரத்து காவலர் இருப்பதில்லை இதனால் மிகவும் சிரமமாக உள்ளது என்று பொது மக்கள் கூறுகிறார்கள். இந்த பெரும்பாக்கம் சுற்றி அதிகமாக பள்ளிகள், குளோபல் மருத்துவமனை கல்லூரிகள், இருக்கிறது. கமிஷனர் அலுவலகம் கூட இங்கு தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சம்மந்தப்பட்டவர்கள் இந்தப் பகுதியில் போக்குவரத்து காவலர்களை பணியில் அமர்த்தி போக்குவரத்தை சரி செய்து பொதுமக்களுக்கு உதவிட வேண்டியது அரசின் கடமை. கடமையை செய்வார்களா காத்திருந்து பார்ப்போம்.
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.