மாநாடு 24 June 2022
இனி ரேஷனில் இலவச பொருட்கள் வழங்கப்படக்கூடாது. இலவச பொருட்கள் வழங்கும் திட்டத்தை நீடித்தால் நிதிநிலை மேலும் மோசமடையும் என்று மத்திய அரசுக்கு நிதி அமைச்சகத்தின் செலவினத்துறை எச்சரித்திருக்கிறது.
கொரோனா நெருக்கடி காலம் தொடங்கிய நேரத்தில் ஏழை, எளிய மக்கள் பசி, பட்டினியோடு இருந்துவிடக்கூடாது என்பதற்காக பிரதமர் கரிப் கல்யாண் அன்ன யோஜனா என்கிற திட்டம் கொண்டுவரப்பட்டது.
2022ஆம் ஆண்டு பட்ஜெட் உரையில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த திட்டம் செப்டம்பர் மாதம் வரையில் தொடரும் என்றார். அதன்படி இத்திட்டத்தின்படி இப்போதும் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்தத் திட்டம் செப்டம்பர் மாதத்திற்கு பிறகும் நீடித்தால் அரசுக்கு கூடுதலாக 80 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும், இதனால் உணவு மானியம் 3.7 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து விடும் என்று நிதியமைச்சகத்தின் செலவினத்துறை மத்திய அரசுக்கு எச்சரிக்கை செய்துள்ளது.
பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு உர மானியத்தை உயர்த்தியது, டீசல் பெட்ரோல் கலால் வரியை குறைத்தது ,சமையல் எண்ணெய் மீதான சுங்க வரியை குறைத்தது, அதில் கூடுதலாக பிரதமர் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தையும் மத்திய அரசு நிறுத்தி விடும் என்று கூறப்படுகிறது.