மாநாடு 3 July 2022
தஞ்சாவூர் கீழவாசல் பழைய மீன் மார்க்கெட் மிகவும் பிரசித்தி பெற்றது, அங்கு வந்தால் சாமானிய மக்களும் தங்கள் கையில் உள்ள பணத்திற்கு தரமான மீன்களை வாங்கி, அங்கேயே வெட்டி சுத்தம் செய்து வீட்டிற்கு எடுத்துச் செல்லும் அளவிற்கு தண்ணீர் வசதியுடன் சிறப்பாக இயங்கி வந்தது. அங்கிருந்து கடைகளை காலி செய்து கீழவாசலிலேயே வேறொரு இடத்தில் புது கட்டிடங்கள் கட்டி மீன் மார்க்கெட் கடைகள் இயங்கி வந்தது, அங்கு இயங்கி வந்த மீன் மார்க்கெட் கடைகளை ,கொரோனா பெருந்தொற்று யாரையும் தொற்றி விடக்கூடாது என்ற காரணத்திற்காக மக்கள் கூட்டம் ஒரே இடத்தில் கூடாதவாறு பல்வேறு இடங்களில் பிரித்து பிரித்து மீன் மார்க்கெட் கடைகளை போட உத்தரவிட்டது தஞ்சாவூர் மாநகராட்சி.
அதன்படி தஞ்சாவூர் கீழவாசல் வெள்ளைப் பிள்ளையார் கோவில் ரவுண்டானா அருகில் பழைய பேருந்து நிலையம் செல்லும் சாலை ஓரங்களிலும் சில கடைகள் போட்டுக்கொள்ள அனுமதி தந்தது, தஞ்சாவூர் மாநகராட்சி, ஆனால் கொரோனா தொற்று குறைந்த போதும் இந்த கடைகள் அதே இடத்திலேயே இயங்கி வருகிறது, அது மட்டுமல்லாமல் வேறு இடங்களில் இருந்த பல கடைகளும் இங்கு கடை போட்டு இருப்பதாக தெரிய வருகிறது, இதனால் இங்கு கூட்டம் மிகவும் அதிகமாக இருக்கிறது.
தினந்தோறும் கொரோனா அலை பெருகி வருவதாக சுகாதாரத் துறை அறிவித்திருக்கிறது இதன் காரணமாக தஞ்சாவூரில் கூட முக கவசம் அணியாதவர்களிடம் காவலர்கள் பணம் வசூலிக்கிறார்கள் என்கிறார்கள் பொதுமக்கள்,
நிலை இப்படி இருக்க ரவுண்டான அருகில் இயங்கி வரும் மீன் மார்க்கெட் தண்ணீர் வசதி உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லாததால் அந்த இடமே அழுகிப்போன மீன்களாலும், மீன் பெட்டிகளாலும் ,நெகிழிகளாலும், குப்பைகளாலும், சாக்கடை போன்ற நீர்களாலும், அசுத்தமாக இருக்கிறது. இதனால் சுலபமாக நோய் தொற்று பரவும் அபாயம் இருக்கிறது,
மேலும் கருந்தட்டாங்குடி பாலம் வழியாக போக்குவரத்துகள் இயங்க ஆரம்பத்து விட்டது, இந்த மார்க்கெட் இயங்கும் ரவுண்டானா பகுதியில் மீன் வாங்க வருபவர்கள் நிறுத்தும் வாகனங்கள்
சாலைகளை அடைத்துக் கொண்டு நிற்பதால் பேருந்துகள் செல்வது மிகவும் கடினமாக இருக்கிறது. இதனால் அவ்வப்போது விபத்துகளும் நடந்திருப்பதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள்,
இதையெல்லாம் பல்வேறு ஊடகங்களும் ,சமூக வலைத்தளங்களும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு தெரியும்படி பலமுறை செய்திகள் மூலமாகவும் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் எடுக்காமல் இருக்கிறது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
மாநகராட்சி நிர்வாகம் என்பது வரிகள் உயர்த்துவது மட்டுமே மாநகராட்சியின் வேலை என்பது போல மாநகராட்சி செயல்பட்டு வருவதை நிறுத்திவிட்டு கொஞ்சம் இங்கு இயங்கி வரும் மீன் கடைகளை எல்லாம் அப்புறப்படுத்தி போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும் ,இடையூர் இல்லாமல் மாற்று இடத்தில் உடனடியாக அமைத்து தர வேண்டும்,
போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் பழைய பேருந்து நிலைத்திற்கு செல்லும் சாலையில் இவ்வாறு போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளின் முக்கால்வாசி பகுதியை அடைத்துக் கொண்டு நிற்கும் வாகனங்களை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு விபத்துக்கள் ஏற்படாதவாறு கண்காணித்து பொதுமக்களுக்கு உதவிட வேண்டும்,
மாநகராட்சி மேயர் இது போன்ற மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தடுக்கும் நோக்கில் நேரில் வந்து பார்வையிட்டு மக்கள் பணியாற்றிட வேண்டும் இதுவே மக்களுக்காக ஊழியம் செய்ய வந்த ஊழியர்களுக்கு அழகாகும்.
நமது மாநாடு இதழில் அவ்வப்போது மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியும் விதமாக செய்திகள் வெளியிட்டு வருகிறோம் ,அந்த செய்திகளுக்கு உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுத்து தீர்வும் கொடுத்து வருகிறார்கள், அவர்கள் அனைவருக்கும் மாநாடு இதழ் தனது பாராட்டை தெரிவிக்கின்றது. அதேபோல இந்த மீன் மார்க்கெட் பிரச்சனையையும் உடனடியாக தீர்த்து வைப்பார்கள் என்று நம்புகிறது.
தரமானவர்கள் பதவியில் இருந்தால் முறையாக வேலை நடக்கும் தஞ்சையில் முறையாக வேலை நடக்கும் என்று நம்புவோம்.
வீடியோ லிங்க் இதோ:https://youtu.be/qEcgG2tm_Dg