Spread the love

மாநாடு 7 July 2022

இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தனது தமிழிசையால் நடத்தி போராட்டத்தில் வெற்றி கண்ட தரணி போற்றும் தன்னிகரில்லா இசை அரசன் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை இந்திய அரசே வழியே வந்து வழங்கியிருக்கிறது.

1970 ,80 காலகட்டங்களில் இந்தி இசை, இந்தி பாடல்கள் தமிழ்நாடு முழுவதிலும் ஒலித்துக் கொண்டிருந்தது. இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தியவர்களில் பலரும் கூட இந்தி பாடல்களை கேட்க வேண்டிய கட்டாயத்தில் தான் இருந்தார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. அதன் தாக்கம் தான் சில மாதங்களுக்கு முன்பு பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா டெல்லியில் இந்தி பாடலை பாடி அங்கு இருந்தவர்களை இன்பப்பட வைத்தார்.

தமிழ்நாட்டில் இந்திய ஆதிக்கம் செலுத்தி இருந்த அதே காலகட்டத்தில் போராட்டம் செய்யப் போகிறேன் என்று சொல்லாமல், திரைப்பட பாடல்களில் வயல் வழி தரைகளில் ஒலித்த மண் இசை ராகங்களை ஒலிக்க வைத்து இந்தியை தமிழ் திரையிசையில் இருந்து ஒழித்து புரட்சி செய்தவர் பண்ணைப்புரத்து சின்ன ராசா என்கிற இசையரசன் இளையராஜா.

இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தி இத்தனை ஆண்டுகள் கழித்தும் கூட இந்தி தெரியாது போடா என்று இன்றும் கூட வாக்கியம் போட்டு இந்தி எதிர்ப்பை தெரிவிக்க வேண்டிய சூழல் இருக்கும் தமிழகத்தில்.

சத்தமில்லாமல் திரையுலகில் யுத்தம் நடத்தி இந்தியை விரட்டிய இளையராஜா அவர்களுக்கு இந்திய அரசே வழியே வந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவி தரும் நிலைக்கு உயர்ந்த இளையராஜா அவர்களை மாநாடு இதழ் மனதார பாராட்டி மகிழ்கிறது.

உளமாற நேசித்து உண்மையாக உழைத்தால் .ஒதுக்க நினைப்பவர்கள் கூட ஓடி வந்து விருது தரும் நிலைக்கு உயரலாம். சாதிக்க நினைப்பவர்களுக்கு சாதியும், மதமும் தடை இல்லை என்பதை இளையராஜாவின் வெற்றி உறுதி செய்துள்ளது.

42100cookie-checkஇந்தியை ஒழித்தவர் இந்திய பாராளுமன்றத்தில் இதுதான் வெற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!