மாநாடு 8 July 2022
சென்னையில் இருந்து கடலூர் மாவட்டம் சிதம்பரம் நோக்கி 47 பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. ஜிஎஸ்டி சாலையில் செங்கல்பட்டு மாவட்டம் தொழுப்பேடு பகுதியில் சென்ற போது சாலையோரம் நின்றிருந்த சரக்கு லாரி மீது அதிவேகமாக மோதியது.
இதில் பேருந்தில் பயணம் செய்த 2 பெண் பயணிகள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 15-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் செங்கல்பட்டு மற்றும் திண்டிவனம் அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.இந்த விபத்தால் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்திய காவலர்கள் விபத்தில் உயிரிழந்தவர்களின் விபரங்களை சேகரித்து வருகின்றனர்.