மாநாடு 8 July 2022
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள ஆவினங்குடியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது, இங்கு 10ம் வகுப்பு படித்து வந்த மாணவியை அவருடன் படித்து வரும் சக மாணவர்கள் 4 பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக நேற்று 4 மாணவர்களும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில் இன்று ஆவினங்குடி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது தெரியாமல் பள்ளிக்கு வந்த மாணவர்கள் பள்ளி திடீர் விடுமுறையால் வீட்டிற்கு திரும்பி சென்று இருக்கிறார்கள்.
விரும்பதகாத நிகழ்வுகள் நடக்கா வண்ணம் இந்தப் பகுதியை சுற்றியுள்ள ஊர்களில் காவலர்கள் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
423440cookie-check10ம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை 4 பேர் கைது
