Spread the love

மாநாடு 16 April 2026

நடைபெற இருக்கின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் யாதவர்கள் 6 பேரை சட்டமன்ற வேட்பாளராக நிறுத்தி தேர்தலில் களமாட வாய்ப்பளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமியை நேரில் சந்தித்து தேர்தலில் தங்களது ஆதரவையும், தங்களது நன்றியையும் தெரிவித்துள்ளனர் யாதவ சங்கத்தினர் விபரம் பின் வருமாறு:

யாதவர்களுக்கு 6 தொகுதிகள் !

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை தாங்குபவரும் அ.தி.மு.க பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமியை தமிழ் மாநில யாதவ மகாசபையின் நிறுவனர் ஸ்ரீரங்கம் எம்.திருவேங்கடம் யாதவ் இயக்க நிர்வாகிகளுடன் சந்தித்தார்

அப்போது,நடைபெற உள்ள 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அ.தி.மு.க.வில் 6 யாதவர்களுக்கு வாய்ப்பு வழங்கியமைக்காக எடப்பாடி கே.பழனிசாமிக்கு திருவேங்கடம் யாதவ் பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்ததோடு அதிமுக தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்கு முழுமையாக பாடுபடுவோம் என உறுதியளித்தார்

இந்நிகழ்வின்போது முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர்,திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் துணைமேயர் ஜெ.சீனிவாசன், ,தமிழ் மாநில யாதவ மகாசபை மாநில இளைஞரணி தலைவர் விஜய் கிருஷ்ணா யாதவ், ஒருங்கிணைப்பாளர் எடத்தெரு பார்த்தசாரதி, மாணவரணி லஷ்மிகாந்தன் உள்பட பலர் உடனிருந்தனர்.

90570cookie-checkஅதிமுகவுக்கு ஆதரவு, எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு யாதவ சங்கத்தினர் நன்றி

Leave a Reply

error: Content is protected !!