Spread the love

மாநாடு 21 July 2026

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் விரிவாக்கத்தில் வணிக வளாகம் கட்டுவதற்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம். தஞ்சாவூர் மாநகராட்சிக்கு ஒரு வார கால அவகாசம் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. அமைதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு விபரம் பின்வருமாறு:

தஞ்சை பழைய பேருந்து நிலையம் விரிவாக்கத்தில் வணிக வளாகம் கட்டுவது மக்கள் பயன்பாட்டுக்கு இடையூறாக இருக்கும் என்பதால் வணிக வளாகம் கட்டுவது நிறுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் பழைய பேருந்து நிலையம் முன்பு 21-7-26 அன்று காத்திருப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இன்று 20-07-26 தஞ்சாவூர் வட்டாட்சியர் முன்னிலையில் மாநகராட்சி அதிகாரிகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி தலைவர்கள் இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தையில் வணிக வளாகம் கட்டுவதை முற்றிலுமாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது குறித்து கலந்தாலோசித்து முடிவெடுக்க மாநகராட்சிக்கு ஒரு வார காலம் அவகாசம் அளிக்கப்பட்டு அதன் அடிப்படையில் காத்திருப்பு போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

அருகிலுள்ள நிலப் பகுதியும் இணைத்து பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யப்படுவது தஞ்சை மக்களின் வெகுவான பாராட்டுதலை பெறுகின்ற நிலையில் அதில் வணிக வளாகம் கட்டுவதற்கு பல்வேறு கட்சியினர் பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் வணிக வளாகம் கட்டுவதை ரத்து செய்யவில்லை என்றால் இதனை தடுத்து நிறுத்த அனைத்து கட்சி அனைத்து அமைப்புகளையும் ஒன்றிணைத்து மாபெரும் மக்கள் போராட்டமாக நடைபெறும் என்பதும் உறுதி செய்யப்பட்டது.

தஞ்சாவூர் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற அமைதி பேச்சு வார்த்தையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கோ சக்திவேல் மாநில நிர்வாக குழு உறுப்பினர் ஏஐடியூசி மாநில செயலாளர் சி சந்திரகுமார் மாவட்ட துணைச் செயலாளர் ஆர் ராமச்சந்திரன் மாவட்ட பொருளாளர் கோ பாஸ்கர் மாநகர செயலாளர் ஆர்பி முத்துக்குமரன் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்

திருநாவுக்கரசு சி கருணாநிதி உள்ளிட்டோர் பங்கேற்றனர் மாநகராட்சி சார்பில் உதவி நிர்வாகப் பொறியாளர் எம் பி மனோகரன் உதவி பொறியாளர் என்.ரமேஷ் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்

93790cookie-checkதஞ்சாவூர் மாநகராட்சிக்கு ஒரு வார கால அவகாசம், போராட்டம் ஒத்தி வைப்பு

Leave a Reply

error: Content is protected !!