Spread the love

மாநாடு 21 July 2026

காவிரி டெல்டாவின் பாசனத்திற்கு பிரதானமாக விளங்குகின்ற காவிரி நீரை தடுப்பதற்கு கர்நாடக அரசு மேகதாது ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சிகளை தடுத்து நிறுத்த வேண்டும், ஒன்றிய அரசு எக்காரணம் கொண்டும் அனுமதி அளிக்க கூடாது, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி மாதந்தோறும் வழங்க வேண்டிய தண்ணீரை கர்னாடக அரசு திறந்து விட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக கட்சி சார்பில் தஞ்சாவூர் பனகல் கட்டிடம் அருகில் இன்று 21/7/26 காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாநில கொள்கை பரப்புச் செயலாளர் ச.சிமியோன் சேவியர்ராஜ் தலைமை தாங்கினார். பாமுசமா தஞ்சாவூர் தெற்கு தலைவர் பி.எஸ் திருமாறன், சட்டமன்ற தொகுதி தலைவர்கள் திருவையாறு கே.ராஜகோபால், ஒரத்தநாடு கே.குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தஞ்சை சட்டமன்ற தொகுதி தலைவர் ஆர்.ஸ்டீபன் அந்தோணிசாமி வரவேற்புரை நிகழ்த்தினார்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டின் விவசாயத்தை பாதிக்கின்ற வகையில் கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்டும் முயற்சிகளை ஒன்றிய மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும், ஒன்றிய அரசு எக்காரணம் கொண்டும் அணை கட்டுவதற்கு அனுமதி அளிக்க கூடாது, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி மாதந்தோறும் வழங்க வேண்டிய காவிரி தண்ணீரை கர்நாடக அரசிடம் இருந்து பெறுவதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், ஏறத்தாழ தமிழ்நாட்டின் 30 மாவட்டங்களின் பாசன தேவைகள், 32 மாவட்டங்களின் குடிதண்ணீர் தேவைகள், நிலத்தடி நீர்மட்டம் உள்ளிட்ட வைகளை கவனத்தில் கொண்டு. காவிரி நீரை பாதுகாப்பதற்கு தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை களை எடுக்க வேண்டும், தஞ்சாவூர் மேற்கு மாவட்டத்தில் கட்டளை கல்லணை கால்வாயில் இருந்து முதலை முத்துவாரி நீர் தேக்கத்திற்கு கட்டளை கால்வாயில் இருந்து பிரிவு வாய்க்கால் எடுத்து தண்ணீர் நிரப்பிட உரிய நடவடிக்கை களை எடுத்தால் இப்பகுதி நூற்றுக் கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும், குடிதண்ணீர் தேவைகள் தட்டுப்பாடு போக்கப்படும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப் பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை சட்டமன்ற தொகுதி பொறுப் பாளர்கள் கவியரசன், ஜோசப் அமல்ராஜ், ஒரத்தநாடு சட்டமன்ற பொறுப் பாளர்கள் செந்தில்குமார், அன்பழகன், திருவையாறு சட்டமன்ற தொகுதி பொறுப் பாளர்கள் வினோபா, கணேசன், ஒன்றிய பொறுப் பாளர்கள் வடிவேல், கமலேஸ்வரன், முத்தமிழ் செல்வன், மகளிர் அணி நிர்வாகிகள் சீதாலட்சுமி, குணசீலி, மேகலா உள்ளிட்டோர் முன்னேற்றனர் முடிவில் திருவையாறு சட்டமன்ற பொருளாளர் கே. முத்தகிருஷ்ணன் நன்றி கூறினார்.

93740cookie-checkகாவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கூடாது ! தஞ்சையில் இந்திய ஜனநாயக கட்சி ஆர்ப்பாட்டம்

Leave a Reply

error: Content is protected !!