Spread the love

மாநாடு 26 July 2026

ஏஐடியுசி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சுமைதூக்கும் தொழிலாளர் சங்க தஞ்சை மாவட்ட 40-வது ஆண்டுப் பேரவை தஞ்சாவூர் கீழ ராஜ வீதி தொழிற்சங்க கூட்ட அரங்கில் இன்று காலை 10 மணிக்கு மாவட்ட செயலாளர் சி. சௌந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்றது.

ஏஐடியுசி மாநில செயலாளர் ஆர். தில்லைவனம் பேரவை கொடியை ஏற்றி வைத்தார். சங்க நிர்வாகி சூர்ய மூர்த்தி வரவேற்புரை நிகழ்த்தினார். அஞ்சலி தீர்மானத்தை அன்பழகன் வாசித்தார். சுமை தூக்கும் சங்கத்தின் மாநில தலைவர் சாமிக்கண்ணு நாற்பதாவது ஆண்டு பேரவையை தொடங்கி வைத்து உரை யாற்றினார்.

சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சி.சந்திரகுமார் வேலை அறிக்கையை முன் வைத்தார். பொருளாளர் தி. கோவிந்தராஜன் வரவு செலவு கணக்கு தாக்கல் செய்தார். பேரவை தீர்மானங்களை மாநில இணை பொது செயலாளர்கள் குணசேகரன், ராஜ்மோகன் மாநில துணைத் தலைவர் சிவானந்தம் ஆகியோர் வாசித்தனர். பேரவையினை வாழ்த்தி வங்கி ஊழியர் சங்க நிர்வாகி க.அன்பழகன், ஏஐடியுசி மாவட்ட தலைவர் சேவையா, போக்குவரத்து சங்க மாநில துணை தலைவர் துரை. மதிவாணன், தெருவியார சங்க மாவட்ட செயலாளர் ஆர் .பி. முத்துக்குமரன், உள்ளாட்சி பணியாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு, மின்வாரிய சங்க மாநிலத் துணைத் தலைவர் பொன். தங்கவேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

பேரவையில் தமிழக உணவுத் துறை அமைச்சர் வடலூர் நேரடி கொள்முதல் நிலையத்தை ஆய்வு செய்த போது ஒரு விவசாயியை அலைபேசியில் தொடர்பு கொண்டு மூட்டைக்கு ரூ50 பட்டியல் எழுத்தர் வாங்கியதாக உறுதிப்படுத்திக் கொண்டு அந்த பட்டியல் எழுத்தரை வேலை நீக்கம் செய்து அந்த அறிவிப்பு ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பெரிதாக வெளிவந்தன. அனைத்து கொள்முதல் நிலையங் களிலும் விவசாயிகளிடம் இது போன்று தொகை பெற்று கொள்முதல் செய்யப் படுகிறது என்பது வெளிப் படையான உண்மையாகும்.

நிர்வாகக் குறைபாடுகளாலும் தொழிலாளர்களின் மீது சுமத்தப்படுகின்ற நியாயமற்ற எடை இழப்பு ரெக்கவரி காரணமாகவும், நெல் ஏற்றி அனுப்புவதற்கு கூடுதலாக லாரிக்கு பணம் கொடுக்க வேண்டிய நிர்பந்தத்தாலும் , விவசாயிகளிடம் பணம் பெற்று பங்கீடு செய்து கொள்கின்ற நிலை தொடர்ந்து நீடிக்கிறது. எனவே உணவு அமைச்சரின் எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற நிலை ஏற்கதக்கது அல்ல அனைத்து மட்டங்களிலும் விரிவாக ஆய்வு செய்து ஆலோசனை களை பெற்று ஒட்டுமொத்தமாக தவறுகளை களைவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று பேரவை சார்பில் உணவு துறை அமைச்சருக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் ஏஐடியூசி சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத்தின் ஆண்டுப் பேரவை திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் நடந்தி நான்காவது கட்டமாக தஞ்சாவூரில் நடைபெறுகிறது. சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் இறந்த சுமை தூக்கும் தொழிலாளர் 14 குடும்பங்களுக்கு தலா ரூ10,000 வீதம் 1 லட்சத்து 40 ஆயிரம் சங்கத்திலிருந்து குடும்ப நல நிதி வழங்கப்பட்டது. குடும்ப நல நிதியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சக்திவேல், பொருளாளர் பாஸ்கர், விதொச மாவட்ட செயலாளர் பக்கிரி சாமி, மகளிர் அமைப்பு மாவட்ட செயலாளர் விஜயலட்சுமி, விவசாய சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர் ஆகியோர் வழங்கினார்கள்.

இதுவரை 1359 குடும்பங்களுக்கு 1 கோடியே 33 லட்சத்து 20 ஆயிரம் குடும்பநல நிதி வழங்கப் பட்டுள்ளது. என்பது குறிப்பிடத் தக்கது. கொள்முதல் சுமைதூக்கும் தொழிலாளர் களுக்கு மூட்டை ஒன்றுக்கு கூலி ரூ10 அமல்படுத்தி ஐந்து ஆண்டுகள் நிறைவுறும் நிலையில் தற்போது ரூ15 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். தகுதியுள்ள கொள்முதல் பணியாளர்களை உடன் நிரந்தர படுத்தப்பட வேண்டும். சேமிப்பு நிலையங்கள் கிடங்குகள் போன்றவற்றில் பணிபுரிகின்ற சுமை தொழிலாளர்களுக்கு மிக மிக சொற்ப கூலியாக ஒரு மூட்டை ஏற்ற இறக்க ரூ1.24 காசு வழங்கப்படுகிறது.

தனியார் ரூ10 வரை இதற்கு கூலி வழங்கும்போது நிர்வாகம் இப்படிப்பட்ட குறைந்த கூலி வழங்குவது கண்டிக்கத்தக்கது. உடனடியாக ஒரு குழு அமைத்து ஆய்வு செய்து தனியாருக்கு இணையாக கூலி வழங்க வேண்டும். கொள்முதல் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு 60 வயதுக்கு மேல் பணி இல்லை என்று மறுப்பது ஆட்கள் பற்றாக்குறை உள்ள நிலையில் கொள்முதல் பணியை பெரிதும் பாதிக்கிறது. அவர்களுக்கு வேறு எந்த சலுகையும் இல்லாத நிலையில் தூக்குகின்ற மூட்டைக்கு கூலி என்ற நிலையில் அவர்களுக்கு உடலில் வலு உள்ளவரை மூட்டை தூக்குவதற்கு அனுமதிக்க வேண்டும்.

ஏற்கனவே கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் தேங்கி இருக்கின்ற நிலையில் அடுத்தடுத்து கொள்முதல் செய்கின்ற போது மிகப்பெரிய நெருக்கடி ஏற்படுவதால் இயக்கம் செய்வதற்கான விரிவான திட்டம் செய்து, உடனுக்குடன் இயக்கம் செய்ய வேண்டும். ஈரப்பதத்தை மாநில அரசே நிர்ணயித்துக் கொள்வதற்கான உரிமையை ஒன்றிய அரசிடம் வற்புறுத்தி பெற்று சூழலுக்கு ஏற்ப முடிவெடுத்து கொள்முதல் செய்ய வேண்டுகிறோம். தற்போது எவ்வளவு ஈரப்பதம் இருந்தாலும் 17% ஈரப்பதம் இருப்பதாக குறிப்பிட்டு கொள்முதல் செய்யப் படுகிறது. இதனால் பணியாளர் களுக்கு மிகுந்த கஷ்டமும் அரசுக்கு பல கோடி இழப்பும் ஏற்படுகிறது. எனவே இதில் தனி கவனம் எடுத்து தமிழ்நாடு அரசு உரிய முடிவெடுக்க வேண்டுகிறோம்.

விவசாயிகள் கொண்டு வருகின்ற நெல்லை காக்க வைக்காமல் உடனுக்குடன் கொள்முதல் செய்வதற்கான விரிவான திட்டமிடுதலை மேற்கொண்டு முறையாக கொள்முதல் செய்ய வேண்டும் தீபாவளி பண்டிகை ஒட்டி வழங்கப் படுகின்ற போனசை ரூ3000 இலிருந்து ரூ5000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்ப ட்டன.

பேரவையில் சங்க நிர்வாகிகள் கிருஷ்ணன், பாலையன், நந்தகுமார், மோகன், நாடியப்பன், சந்தான கிருஷ்ணன், செல்வம், கரிகாலன், ராஜா, மூர்த்தி ஜான் பீட்டர், சக்திவேல், பஞ்சாபிகேசன் சுரேஷ், கண்ணையன், இராதா கிருஷ்ணன், மணிவண்ணன், பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் குமாரராஜா நன்றி கூறினார்.

94040cookie-checkதஞ்சையில் ஏஐடியுசி முக்கிய கோரிக்கை தீர்மானங்கள் நிறைவேற்றம்.

Leave a Reply

error: Content is protected !!