Spread the love

மாநாடு 27 July 2026

தஞ்சை மாவட்டத்தில் டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை முன்னதாகவே எடுக்க வேண்டும் மக்கள் இயக்கம் கூட்டமைப்பு கோரிக்கை.

தஞ்சை மாவட்ட சுகாதார இயக்குனர் அலுவலகத்தில் மக்கள் இயக்கங்கள் கூட்டமைப்பு சார்பில் பருவ மழை தொடங்குவதற்கு முன்பு தஞ்சை மாநகரம் மற்றும் தஞ்சை மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளதால் டெங்கு பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை சுகாதாரத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் போதுமான கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள வேண்டும் தேவையான மருந்துகள் கையிருப்பு வைத்துக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர்.

சிபிஐ எம் எல் மாநகரச் செயலாளர் எஸ்.எம். இராஜேந்திரன் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் வெ.சேவையா, இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் க.தமிழ் முதல்வன் ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாவட்ட தலைவர் அழகு .தியாகராஜன், தேசிய முன்னணி மாவட்ட செயலாளர் எம்.முருகையன், உலகத்தமிழர் பேரவையின் நிர்வாகி சதா. முத்துகிருஷ்ணன், ஏஐடியுசி நிர்வாகி ராஜேஷ், விசிறி சாமியார் முருகன் உள்ளிட்டோர் மாவட்ட சுகாதார இயக்குனர் கலைவாணியை சந்தித்து கோரிக்கை மனுவினை அளித்தனர்.

94120cookie-checkதஞ்சாவூர் மாவட்ட சுகாதார இயக்குனர் கலைவாணியிடம் மக்கள் இயக்கம் கூட்டமைப்பு கோரிக்கை.

Leave a Reply

error: Content is protected !!