Spread the love

மாநாடு 28 July 2026

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் இடதுசாரிகள் பொது மேடை சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் தெரிவித்துள்ளதாவது.

தஞ்சை மாநகரம் மற்றும் மாவட்டத்தில் தெரு நாய்கள் அதிகமான அளவில் உள்ளது. சாதாரணமாக பல்வேறு வேலைகளுக்கு செல்வோர், வேலைக்கு சென்று இரவில் வீட்டிற்கு வருபவர்கள், பள்ளி செல்லும் குழந்தைகள், தெருவில் விளையாடும் குழந்தைகள் உள்ளிட்டு பல்வேறு தரப்பினரை தெரு நாய்கள் கடித்து குதறுகின்றது. அச்சுறுத்து கின்றது.இந்த காட்சிகள் செய்தித்தாள் மற்றும் தொலைக் காட்சிகளில் காட்டப்படுகிறது. இது மிகவும் வேதனையாகவும், பயமாகவும் உள்ளது. இத்துடன் வெறிநாய்கள் தொல்லையும் இருக்கிறது.

தஞ்சை மாவட்டத்தில் மட்டும் ஏறத்தாழ சுமார் பத்தாயிரம் பேர் வரை தெரு நாய்களால் பாதிக்கப் பட்டுள்ளனர். இவர்களில் ஒரு சிலரை வெறிநாய்கள் கடித்து இறப்புக்கும் காரணமாக உள்ளது. எனவே தஞ்சை மாவட்ட நிர்வாகம் தெருநாய்கள் குறித்து உயர்நீதிமன்ற வழிகாட்டல்களை உடனடியாக அமல்படுத்த வேண்டும்,தெரு நாய்களுக்கு என்று தனியாக மாநகரின் ஓரத்தில் திறந்தவெளி பண்ணை அமைத்து பராமரிக்க வேண்டும், மேலும் நாய்களுக்கு கருத்தடை செய்வது நிறுத்தப் பட்டுள்ளது. உடனடியாக கருத்தடை பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

மேலும் மாநகரின் விரிவாக்க பகுதிகள், கிராமங்களில் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. பன்றிகளும் குழந்தைகளை விரட்டி கடிக்கிறது. எல்லா இடங்களிலும் சுதந்திரமாக சுற்றித் திரியும் பன்றிகளால் சுகாதார பாதிப்பு ஏற்படுகிறது. எனவே பன்றிகளையும் தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.

கோரிக்கை மனுவினை இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை. மதிவாணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் க.தமிழ் முதல்வன், மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் தேவா, தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட செயலாளர் அ.யோகராஜ், நிர்வாகிகள் ஆர்.
ஆர் .நகர்.சேகர், ராகவேந்திரன் உள்ளிட்டோர் கோரிக்கை மனுவினை அளித்தார்கள்.

94180cookie-checkதெரு நாய்கள் பிரச்சனை, உயர்நீதிமன்ற தீர்ப்பு ,மாவட்ட ஆட்சியரிடம் மனு.

Leave a Reply

error: Content is protected !!