மாநாடு 8 July 2022
கடந்த அதிமுக ஆட்சியில் தொடர்ந்து 10 ஆண்டுகள் உணவுத்துறை அமைச்சராக இருந்தவர் மன்னார்குடியை சேர்ந்த காமராஜ் 2015 -16 காலகட்டங்களில் தற்காலிக அறநிலை துறை அமைச்சராகவும் இருந்தார். நன்னிலம் சட்டமன்ற தொகுதி மக்களால் தொடர்ந்து 3 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கடந்த 2015ம் ஆண்டு கணக்கீட்டின்படி முன்னாள் அமைச்சர் காமராஜின் சொத்துமதிப்பு ரூ.1,39,54,290 ஆக கணக்கில் காட்டப்பட்டிருந்தது. இதில் அசையா சொத்துகளான விவசாய நிலங்கள், கட்டிடங்கள் உள்ளிட்டவையும் அடக்கம்.
இந்த நிலையில் முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் அவருக்கு சம்பந்தப்பட்ட சென்னை தஞ்சாவூர் உட்பட 49 இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை இட்டதில் ,வருமானத்திற்கு அதிகமான சொத்துக்கள் சேர்த்து இருப்பதாக காமராஜ், இவரது மகன்கள் 2 பேர் சொத்து குவிப்புக்கு உடந்தையாக இருந்ததாக 3 பேர் உட்பட மொத்தம் 6 பேர் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். இதில் முதல் குற்றவாளியாக அமைச்சர் காமராஜ் சேர்க்கப்பட்டிருப்பது, அதிமுக ஒற்றைத் தலைமை பிரச்சனையில் ஏற்கனவே தள்ளாடிக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில், இந்த சம்பவம் அவர்களிடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதற்க்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எம்.ஜி.ஆர் அவர்கள் கட்சியை தொடங்கிய காலத்திலிருந்து பல்வேறு அடக்குமுறைகளை, வழக்குகளை தாண்டி தான் அதிமுக வந்தது.அதிமுகவை அழித்துவிடலாம் என நினைக்கிறாரகள். ஆனால், அதிமுக தண்ணீரில் மூழ்காத பந்து போன்றது. எவ்வளவு அழுத்தத்தினாலும் மேலே வரத்தான் செய்யும். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடைபெற்று இருக்கும் வருமான வரித்துறை சோதனையை நீதிமன்றம் மூலம் எதிர்கொள்வோம் என தெரிவித்துள்ளார்.