மாநாடு 12 July 2022
தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக ட்விட்டர் பதிவில் கூறி இருக்கிறார்.
இதைப் பற்றி ஸ்டாலின் கூறுகையில்: தனக்கு உடல் சோர்வு அதிகமாக இருந்ததால் இன்று மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதாகவும், அதில் கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், அதன் காரணமாக தன்னை தனிமைப் படுத்திக் கொண்டதாகவும் கூறி இருக்கிறார்.
மேலும் பொதுமக்கள் முக கவசங்கள் அணிந்து கொண்டும் தடுப்பூசிகள் போட்டுக் கொண்டும் கவனமாக இருக்கும்படி முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.
லிங்க் :https://twitter.com/mkstalin/status/1546825621447225346?t=RTUslLlv2YTzsDN780-Oyg&s=19
429430cookie-checkமுதல்வர் ஸ்டாலினுக்கு கொரோனா உறுதி