மாநாடு 13 July 2022
தஞ்சாவூர் அருகே இனாத்துகான்பட்டி என்ற இடத்தில் பிரபல ரவுடி சுபாஷ் சந்திர போஸ் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் 11ம் தேதி அங்குள்ள சியாமளா தேவி அம்மன் கோவில் திருவிழா நடந்திருக்கிறது. அப்போது அங்கு வந்த 27 வயது உடைய சுபாஷ் சந்திர போஸ்க்கும் அவரது உறவினர்களான 37 வயதுடைய ஜோதி ராஜன், 33 வயது உடைய சிவக்குமார், ஆகியோருக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டிருக்கிறது.
அதன் பிறகு திருவிழாவின் மறுநாள் நேற்று 12-7-2022 மாலை 6 மணி அளவில் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்று இருக்கிறது, அப்போது மஞ்சள் தண்ணீர் ஊத்தி விளையாடும் போது அங்கு வந்த சுபாஷ் சந்திரபோஸ் கையில் அருவாளுடன் மஞ்சத்தண்ணியை அவரது தூரத்து உறவினரான ஜோதிராஜன் மற்றும் சிவக்குமார் மீது ஊற்றி தகராறு செய்ததாக தெரிய வருகிறது. அதன் விளைவாக ஜோதி ராஜனும், சிவகுமாரும் சேர்ந்து சுபாஷ் சந்திர போஸை அறிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. குற்றவாளிகளை தமிழ் பல்கலைக்கழக காவல் நிலைய காவலர்கள் குற்றவாளிகளை விரைந்து பிடித்து வந்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.