மாநாடு 17 July 2022
கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூரில் இயங்கி வரும் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்த 12 ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணத்திற்கு நீதி கேட்டு கடந்த நான்கு நாட்களாக அமைதி வழியில் நடைபெற்று வந்த போராட்டம் இன்று திடீரென கலவரமாக மாறியது இதில் பள்ளி வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டது,காவலர்களின் வாகனங்களும் தாக்கப்பட்டதாக தெரிய வருகிறது, அதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சியில் தற்போதைய நிலவரம் தனக்கு மிகவும் வருத்தமளிப்பதாகவும், கலவரத்தில் ஈடுபட்டிருப்பவர்களை அமைதி காக்கும் படியும் அரசின் மீது நம்பிக்கை வைத்து கலைந்து செல்லும்படியும் முதலமைச்சர் ஸ்டாலின் ட்விட்டர் வாயிலாக கேட்டுக் கொண்டுள்ளார், டிஜிபி உள்ளிட்டவர்களை கள்ளக்குறிச்சிக்கு சென்று விசாரணை மேற்கொள்ள அறிவுறுத்தி இருப்பதாகவும் கூறியிருக்கிறார், தீவிர விசாரணை நடத்தப்படும் குற்றவாளிகள் உறுதியாக தண்டிக்கப்படுவார்கள் எனவே அமைதி காக்க வேண்டும் என்று ட்விட்டர் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்,
கலவரம் தொடர்பாக வதந்திகள் பரவாமல் இருப்பதற்காக இந்த பகுதிகளில் ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கிறது,
பன்னிரண்டாம் வகுப்பு மாணவியின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தர மாவட்ட கல்வித் துறை அதிகாரிக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
போராட்டக்காரர்களின் கல்வீச்சில் காவல்துறையை சேர்ந்த பலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது, போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டுள்ளது. இதனால் கள்ளக்குறிச்சி பகுதியே பரபரப்பாக உள்ளது. 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.
முதல்வரின் ட்விட்டர் லிங்க்:https://twitter.com/mkstalin/status/1548575518647144448?t=xmE5PghJX1Mza4KqVYQong&s=19