மாநாடு 19 July 2022
விடியல் ஆட்சியை கொடுப்போம் என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு அவ்வப்போது பொது மக்களுக்கு இடியை இறக்குகிறது தனது அறிவிப்பின் மூலம் , முன்பெல்லாம் சுவிட்சை போட்டால் லைட் எரியும் இப்போது தமிழக அரசு உயர்த்தி இருக்கும் மின் கட்டணத்தை கேட்டால் வயிறுதான் எரிகிறது என்கிறார்கள் பொதுமக்கள்.
தமிழக அரசு பல்வேறு காரணங்களை கூறி தற்போது மின் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறது புதிய மின் கட்டணம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
அதன்படி புதிய மின் கட்டண விவரம் பின்வருமாறு: சென்ற அதிமுக அறிவித்த 100 யூனிட் வீடுகளுக்கான இலவச மின்சாரம் அப்படியே இருக்கும் .என்றும் 101 யூனிட்டில் இருந்து 200 யூனிட் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு மின் கட்டணம் 200 ரூபாய் வசூலிக்கப்படும்.
201 முதல் 500 யூனிட்களுக்கு கட்டணம் 3 ரூபாயும்.
அதாவது வாடிக்கையாளர் பயன்படுத்தப்பட்டிருப்பது 400 யூனிட் என்பதால் 201 முதல் 400 யூனிட்களுக்கு கணக்கிட்டால் 600 ரூபாய் செலுத்த வேண்டும். இதில் மொத்த நிலையான கட்டணம் 30 ரூபாயாகும். ஆக மொத்தத்தில் நீங்கள் செலுத்த வேண்டிய தொகை 30+ 200+600 = 830 ரூபாயாகும்.
500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் முதல் 100 யூனிட்டுகள் இலவசம்.அதற்கு மேல் 101 – 200 யூனிட்டுகளுக்கு ஒரு யூனிட்டின் விலை 3.50 ரூபாய் என கணக்கிடப்படும்.
அப்படிப் பார்த்தால் 101-200 யூனிட்டுகளுக்கு 350 ரூபாயாக கணக்கில் வசூலிக்கப்படும்.
இதே 201 முதல் 500 யூனிட்டுகளுக்கு ஒரு யூனிட்டின் விலை 4.60 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அந்த வீதத்தில் 300 யூனிட்களுக்கு 1,380 ரூபாய் வசூலிக்கப்படும்.
இதே 500 முதல் 520 யூனிட்டுகளுக்கு ஒரு யூனிட்டின் விலை 6.60 ரூபாயாகும். இந்த வீதத்தில் கணக்கிடும்போது 132 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்.
இத்துடன் நிலையான கட்டணம் 50 ரூபாய் மொத்தம் ரூ.50 + 350+ 1380+ 132 = 1,912 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்.
இந்த மின் கட்டண உயர்வு அடிமட்டத்தில் உள்ளவர்களை மட்டுமல்லாமல் அனைவரையுமே பாதிக்கும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள், மத்திய அரசின் கட்டாயத்தாலேயே மின் கட்டணம் உயர்த்த வேண்டிய சூழல் வந்தது என்கிறார் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி.இப்படி பல்வேறு காரணங்களைச் சொல்லி இப்போது மக்கள் விரோத போக்கில் திமுக அரசு செயல்பட்டால், இனி எப்போதுமே ஆட்சி அதிகாரத்துக்கு வர முடியாத நிலையை மக்கள் தருவார்கள் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
இந்த மின் கட்டண உயர்வை பற்றி தஞ்சை மக்கள் கருத்து என்ன வீடியோ லிங்க் இதோ:https://youtu.be/Bjk11PF1tao
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.