மாநாடு 20 July 2022
ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு சென்னை வானகரத்தில் நடைபெற்றது ,அதில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களோடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்தார். அப்போது அதிமுக தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது ,அது பெரும் கலவரமாக மாறியது. அதிமுகவின் தலைமை அலுவலக கதவுகள் உடைக்கப்பட்டது. காவலர்கள் பெருமளவில் குவிக்கப்பட்டார்கள்.
மீண்டும் கலவரம் ஏற்படுவதை தடுக்கும் விதமாக கோட்டாட்சியர் அதிமுகவின் தலைமை அலுவலகத்தை பூட்டி சீழ் வைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பும் ,இபிஎஸ் தரப்பும் தனித்தனியாக நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்கள்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது இதை விசாரித்த நீதிபதி எடப்பாடி பழனிச்சாமியிடம் அதிமுகவின் தலைமை அலுவலக சாவியை ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார் மேலும் தலைமை அலுவலகத்துக்குள் தொண்டர்கள் யாரும் ஒரு மாத காலத்திற்கு செல்லக்கூடாது , அதிமுகவின் அலுவலகத்திற்கு காவலர்கள் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்தடுத்து வெற்றியால் இபிஎஸ் தரப்பு மகிழ்ச்சி ஓபிஎஸ் தரப்பு அதிர்ச்சி.
Thank you, your article surprised me, there is such an excellent point of view. Thank you for sharing, I learned a lot.