மாநாடு 21 July 2022
கள்ளக்குறிச்சி அருகில் உள்ள கனியாமூரில் இயங்கி வந்த சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டினார்கள், போராடினார்கள் பிறகு பொதுமக்களும் அதிக அளவில் கூடி போராடி வந்த நிலையில் போராட்டம் கலவரத்தில் முடிந்தது, அதன் விசாரணை காவல்துறையால் தற்போது நடந்து வருகிறது,
இதனிடையே ஸ்ரீமதியின் தந்தை ராமலிங்கம் பிரேத பரிசோதனையின் போது எங்களது தரப்பு மருத்துவர்களையும் வைத்திருக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார், அந்த கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்தது, இந்த கோரிக்கையை வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் மாணவி ஸ்ரீமதியின் தந்தை மேல்முறையீடு செய்திருந்தார் அந்த வழக்கு சற்று முன் உச்ச நீதிமன்ற நீதிபதி கவாய் மற்றும் பி.எஸ். நரசிம்மா அமர்வில் விசாரணைக்கு வந்தது. போது ஸ்ரீமதியின் தந்தை பாதிக்கப்பட்டது நாங்கள் தான் இருந்த போதும் தமிழக அரசு சரியான நியாயமான முறையில் விசாரணையை மேற்கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டினார். இவை அனைத்தையும் உயர்நீதிமன்றத்திலேயே நீங்கள் கூறலாமே ஏன் உயர் நீதிமன்றத்தின் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையா என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் வழக்கை திரும்பப் பெற்று உயர்நீதிமன்றத்திலேயே முறையிடுங்கள் அல்லது இந்த வழக்கை நாங்கள் தள்ளுபடி செய்ய வேண்டியதாயிருக்கும் என்றனர். நீதிபதிகளின் அறிவுறுத்தலின் காரணமாக மரணம் அடைந்த மாணவி ஸ்ரீமதியின் தந்தை வழக்கை உச்சநீதிமன்றத்தில் இருந்து திரும்ப பெற்றார்.
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.