Spread the love

மாநாடு 1 August 2022

காதல் என்று நம்பி கோயிலில் திருமணம் செய்து கொண்ட இளம் தம்பதியின் வாழ்க்கை மனைவி மரணத்திலும் ,கணவன் சிறையிலும் முடிந்திருக்கிறது.

சென்னை செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரின் மகள் 18 வயதான தமிழ்ச்செல்வியும், மெக்கானிக் மதன் என்பவரும் காதலித்து வந்ததாகவும் அதன் பின் கோயிலில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த ஜூலை 23ஆம் தேதி தமிழ்செல்வியை காணவில்லை அவர் வேறு யார் கூடவோ ஓடிவிட்டார் என்று மெக்கானிக் மதன் கூறியிருக்கிறார், மனைவியை பிரிந்த சோகத்தில் மதன் கஞ்சா போதைக்கு அடிமையானதாகவும், எந்நேரமும் மது போதையில் இருந்ததாகவும் கூறப்பட்டது. அதன் பிறகு செங்குன்றம் காவல் நிலையத்தில் தமிழ்ச்செல்வியின் தந்தை தனது மகளை காணவில்லை என்று புகார் அளித்திருக்கிறார் அதன் பேரில் காவலர்கள் விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள், அந்த விசாரணையில் திடுக்கிடும் பல தகவல்கள் தெரிய வந்திருக்கிறது.

தீவிர விசாரணையில் இறங்கினார்கள் காவலர்கள் அதன் முதற்கட்டமாக நண்பர்களிடம் விசாரணை நடத்தி இருக்கிறார்கள், அப்போது மதனும் தமிழ்ச்செல்வியும் சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் வழியில் உள்ள கைலாச கோனா என்கிற அருவிக்கு சென்றதாக தெரிய வந்திருக்கிறது, அதனைத் தொடர்ந்து தமிழ்ச்செல்வியின் புகைப்படத்தை எடுத்துக் கொண்டு ஆந்திர மாநிலம் நாராயண வனம் நகர காவல் நிலையத்திற்கு சென்று இருக்கிறார்கள் செங்குன்றம் காவலர்கள்.

அங்கு அந்தக் காவலர்களின் துணை கொண்டு கைலாச கோனா அருவி பகுதியிலிருந்த கண்காணிப்பு கேமராவை சோதித்திருக்கிறார்கள், அதில் இருசக்கர வாகனத்தில் மதனும், தமிழ்ச்செல்வியும் சேர்ந்து கைலாச கோனா அருவிக்கு சென்ற காட்சி பதிவாகி இருக்கிறது பிறகு அருவியில் இருந்து திரும்பும்போது தமிழ் செல்வி இல்லாமல் மதன் மட்டும் வரும் காட்சியை வைத்து மெக்கானிக் மதனை விசாரித்ததில் தகவல்கள் தெரிய வந்திருக்கிறது அதாவது தனது மனைவி தமிழ்ச்செல்வி திருமணத்திற்கு பிறகும் நண்பர்களோடு அலைபேசியில் பேசிக்கொண்டிருந்ததால் மதன் சந்தேகப்பட்டு தமிழ்ச்செல்வியை மது போதையில் வந்து அடிக்கடி அடித்து, உதைத்து தகராறு செய்திருக்கிறார், இப்படியே மூன்று மாதங்கள் கழிந்திருக்கிறது, அதன் பிறகு தமிழ்செல்வியை மதன் கைலாச கோனா அறிவிக்கு அழைத்துச் சென்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தி கொலை செய்ததை ஒப்புக் கொண்டிருக்கிறார். சடலம் கைப்பற்றப்பட்டிருக்கிறது, கொலையாளி மதன் சிறைப்படுத்தப்பட்டிருக்கிறார்.

ஈர்ப்பை காதல் என்று நினைத்து கல்யாணம் செய்து கொள்கிறார்கள். ஈர்ப்பு வெறுப்பாக மாறி வாக்களிக்க வேண்டிய வயதிலேயே வாழ்க்கையை தொலைத்து விடுகிறார்கள் இன்றைய இளையவர்கள். வகை வகையாய் கல்வியை கற்றுக் கொடுங்கள் பிறகு, முதலில் வாழ்க்கை கல்வியை கற்றுக் கொடுத்தால் மட்டுமே இது போன்ற செயல்கள் நடப்பதை தடுக்க முடியும்.

46230cookie-checkவாக்களிக்க வேண்டிய வயதில் வாழ்க்கையே போச்சி இது காதலா
25 thoughts on “வாக்களிக்க வேண்டிய வயதில் வாழ்க்கையே போச்சி இது காதலா”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!