மாநாடு 9 August 2022
எம்ஜிஆர் கட்சி தொடங்கியவுடன் 1973 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு அதிமுகவின் முதல் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமைக்குரிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்
மாயத்தேவர்(88) வயது மூப்பின் காரணமாக உடல் நல கோளாறு ஏற்பட்டு இருந்தார் இந்நிலையில் சற்று முன் திண்டுக்கல் அருகே உள்ள சின்னாளப்பட்டியில் மாயத்தேவர் இயற்கை எய்தினார் அவரின் மறைவையொட்டி பல்வேறு கட்சி தலைவர்களும் இரங்கல்கள் தெரிவித்து வருகிறார்கள். இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற முதல் நபரும் இவரே அதிமுகவின் முதல் பாராளுமன்ற உறுப்பினரும் இவரே என்கிற பெருமைக்குரியவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாயத்தேவர்.
467820cookie-checkஅதிமுகவின் முதல் பாராளுமன்ற உறுப்பினர் சற்றுமுன் காலமானார்