மாநாடு 10 August 2022
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போதை பழக்கத்தை தடுப்பதற்காக சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் மாவட்ட ஆட்சியர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் சிறப்பு ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது,
அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தில் நாளுக்கு நாள் போதைப்பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்காகவே இந்த கூட்டத்தை இதுவரை கூட்டியுள்ளோம் ஆனால் முதல் முறையாக போதை பொருள் நடமாட்டத்தை தடுக்க தற்போது கூட்டியுள்ளோம்.
அழிவு பாதையான போதை பொருளை நாம் நமது முழு ஆற்றலையும் பயன்படுத்தி தடுக்க வேண்டும். அதற்கான உறுதி எடுக்க வேண்டும். போதை மருந்துகள் மாநிலத்திற்குள் நுழைவதை தடுக்க வேண்டும். விற்பனையை தடுக்க வேண்டும், பயன்படுத்துவதை தடுக்க வேண்டும். பயன்படுத்தவர்களை அதிலிருந்து மீட்டு நல்வழிப்படுத்த வேண்டும்.
இந்த உறுதியை மாவட்ட ஆட்சியர்கள் காவல் கண்காணிப்பாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். போதை பொருள் நடமாட்டம் குஜராத்தை, மகாராஷ்டிராவை விட தமிழ்நாட்டில் குறைவு தான் என நான் சமாதானம் அடைய தயாராக இல்லை. போதை என்பது தனி மனித பிரச்சனை அல்ல சமூக பிரச்சனை.போதைப்பொருள் பழக்கம் சமூகத் தீமை.இதை அனைவரும் சேர்ந்து தான் தடுத்தாக வேண்டும் என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
டாஸ்மாக்கை அரசை நடத்திக் கொண்டு போதையை ஒழிக்க முதல்வரே போதனை செய்வது யோக்கியன் வர்றான் சொம்பை எடுத்து உள்ளே வை என்கிறது போல இருக்கிறது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.