மாநாடு 18 August 2022
இந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் இந்திய நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு அடைந்ததை கொண்டாடும் விதமாக, இந்தியாவில் அலுவலகங்கள் ,கடைகள், வீடுகள் என அனைத்து இடங்களிலும் தேசிய கொடியை மூன்று நாட்கள் ஏற்றி வைக்க வேண்டும் என்று இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டிருந்தார் ,அதனை ஏற்று கிராமங்கள், நகரங்கள் என்ற வேறுபாடு இல்லாமல் அனைத்து பகுதிகளிலும் அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
அதிலும் தமிழ்நாட்டில் அனைத்து கிராம ஊராட்சிகள் உட்பட அனைத்து சிற்றூர்களிலும் கூட ஒவ்வொரு வீடுகளுக்கும் மூவர்ண கொடிகள் கொடுக்கப்பட்டு வீட்டு வாசல்களில் கட்டி வைக்கப்பட்டது. அந்த கொடியை கொடுக்கும் போது மூன்று நாட்கள் கொடியை வீடுகளில், கடைகளில் ஏற்றி கட்டி வைக்க வேண்டும் என்று கூறினார்கள் அது மட்டுமல்லாமல் தொடர்ந்து பரப்புரைகளும் விளம்பரங்களும் செய்யப்பட்டது ஆனால் அந்த மூன்று நாட்களுக்குப் பிறகு அந்த கொடியை அவமரியாதை ஏற்படுவதற்கு முன்பாக எப்படி அவிழ்த்து மடித்து பத்திரப்படுத்தி மரியாதையாக வைக்க வேண்டும் என்பதை பொதுமக்களுக்கு சரியாக தெரிவிக்க ப்படவில்லை அதன் காரணமாக தான் இன்று கூட பல இடங்களில் கடைகளில் கொடிகள் இருப்பதை காண முடிகிறது.
இதைப் பற்றி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், தேசப்பற்றாளர்கள் சிலரிடம் பேசினோம் அவர்கள் கூறும்போது தேசியக்கொடிக்கு என்று ஒரு மரியாதை இருக்கிறது, இத்தனை மணிக்கு கொடியை ஏற்ற வேண்டும் , தேசிய கொடியை குறிப்பிட்ட இத்தனை மணிக்கு இறக்க வேண்டும். கொடி வணக்கம் செலுத்த வேண்டும் போன்ற பல நெறிமுறைகள் இருக்கிறது, இருந்தது. அதன்படி தான் இந்த தேசிய கொடியை நாம் கையாள வேண்டும். தேசியக்கொடி என்பது வெறும் துணி அல்ல என்பதை பொதுமக்களும் தெரிந்து கொள்ள வேண்டும். அது நமது மக்கள் சுதந்திர காற்றை சுவாசிக்க வேண்டும் என்கிற பெருங்கனவில் விடுதலை வீரர்கள் விடுதலை வேண்டி தங்களின் சுவாச காற்றை விட்ட அந்த வீர மறவர்களின் தியாகத்தை நினைவு கூறும், அவர்களுக்கு மரியாதை செலுத்தும் தினம் தான் சுதந்திர தினம், அதன் வெளிப்பாடாக மரியாதையோடு நடத்த வேண்டிய கொடி தான் நமது தேசியக்கொடி என்பதை நமது மக்கள் புரிந்து உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.அப்படி இருக்கையில் இந்த ஆண்டு சுதந்திர தினத்தின் 75வது ஆண்டு என்கிற காரணத்துக்காக அனைத்து இடங்களிலும் கொடுக்கப்பட்டு அந்த கொடி பறக்க விடப்பட்டது ஆனால் சுதந்திர தினம் முடிந்து மூன்று நாட்கள் ஆன பிறகும் இன்னுமும் பல இடங்களில் பறந்து கொண்டிருக்கிறது அது மட்டுமல்லாமல் சில இடங்களில் கயிறுகள் அவிழ்க்கப்பட்டு அறையும், குறையுமாக பறந்து கொண்டிருக்கிறது.
இந்த செயல் தேசியக்கொடிக்கு அவமரியாதை செய்யப்படும் நிகழ்வாகும்.
இதனை சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக
கொடியை அவிழ்த்து படுக்க வசத்தில் வைத்து முதலில் ஆரஞ்சு நிறத்தை உள்பக்கம் மடித்து அதன் பிறகு பச்சை நிறத்தை மடித்து வெள்ளை நிறத்தில் அசோகச் சக்கரம் தெரியும்படியாக வைத்து வலது புறமும் இடது புறமும் மடித்து பத்திரப்படுத்தி வைக்க வேண்டும் இதுவே முறையான செயல் என்கிறார்கள் தேசப்பற்றாளர்கள்.
இப்படி இருக்கையில் தஞ்சாவூரில் பல இடங்களிலும் தேசியக்கொடி இன்னும் பறக்க விடப்பட்டு கொண்டிருக்கிறது,
கருந்தத்தங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உட்பட கரந்தை பகுதிகள் பள்ளியக்ரஹாரம் போன்ற பகுதிகளில் இன்னமும் பறந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.அந்தப் பகுதியில் சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக தேசிய கொடியை கொடுத்து கொடிக்கு மரியாதை ஏற்படுத்த உழைத்தவர்கள் அந்த கொடிக்கு அவமரியாதை ஏற்படாமல் பார்த்து தடுத்துக் காக்க வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
அதிலும் கரந்தையில் ஆரம்ப சுகாதார நிலையத்தின் முகப்பு வாசலில் பறக்க விடப்பட்டிருக்கும் இந்த கொடியை இன்னமும் இறக்கி பத்திரப்படுத்தாமல் இருப்பது அலட்சியத்தின் உச்சம் தானே.
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.