Spread the love

மாநாடு 19 August 2022

திமுகவில் தஞ்சாவூரில் தொடக்க காலந்தொட்டே திமுகவின் தலைவர் கருணாநிதியின் நம்பிக்கைக்குரியவராக இருந்தவர் டி.கே.கோவிந்தன். அதேபோலவே திமுகவின் அடிமட்ட தொண்டராகவும், இளைஞர் அணி தொடங்கப்பட்டு திமுகவின் தற்போதைய தலைவர் மு.க.ஸ்டாலின் இளைஞர் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டபோது ஸ்டாலினின் நம்பிக்கைகுரிய தளபதியாக தஞ்சையில் இருந்தவர் டி.கே.கோவிந்தனின் மகன் டி.கே.ஜி. நீலமேகம், இவர் விவரம் தெரிந்த காலம் தொட்டு திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டு படிப்படியாக கட்சியில் உயர்ந்து தஞ்சாவூரின் நகரச் செயலாளராக பணியாற்றி அதன் மூலம் தஞ்சாவூரில் சட்டமன்ற வேட்பாளராக நிறுத்தப்பட்டு தற்போது தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக இருப்பவர் டி.கே.ஜி.நீலமேகம்.

இவர் வகித்து வந்த தஞ்சாவூர் நகரச் செயலாளர் பதவி தற்போது பறிக்கப்பட்டு அந்த பதவி தற்போது திமுகவின் இளைஞர் அணி தலைவராக இருக்கும் உதயநிதி ஸ்டாலினின் நம்பிக்கையை பெற்ற உதய நிதியின் ஆதரவாளரான தஞ்சாவூரின் தற்போதைய மேயர் சண்.ராமநாதனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

இதனைப் பற்றி திமுகவில் உள்ள சிலரிடம் பேசினோம் அவர்கள் கூறியதாவது:

டி.கே.ஜி.நீலமேகம் ஆரம்ப காலந்தொட்டு கட்சிக்கு விசுவாசமாக இருந்தவர்தான் மறுக்க முடியாது, அதே நேரத்தில் அவர் சட்டமன்ற உறுப்பினராக ஆனதற்குப் பிறகு கட்சிக்காரர்கள் ,நண்பர்கள் எல்லாத்தையும் விட தனது சாதிக்காரர்களை தனது உறவினர்களை முன்னிறுத்துவதில் மும்மரமாக இருந்தார் இது எங்கள் கட்சியின் தலைமைக்கு அவ்வப்போது தெரியப்படுத்தப்பட்டு இருந்திருக்கிறது அதுவும் கூட அவரின் பதவி பறிப்புக்கு காரணம் என்றார் ஒருவர்.

மற்றொருவர் கூறும்போது நாங்களும் எங்களது மாவட்டச் செயலாளரும் சேர்ந்து விருப்பப்பட்டு தான் டி.கே.ஜி. நீலமேகம் தஞ்சாவூர் நகர செயலாளராக வருவதற்காக பாடுபட்டு உழைத்து ஆதரித்து வந்தோம் பதவிக்கும் கொண்டு வந்தோம், ஆனால் தஞ்சாவூரின் சட்டமன்ற உறுப்பினராக நீலமேகம் ஆனதிலிருந்து அவர் நடவடிக்கைகள் கொஞ்சம் கொஞ்சமாக மாறியது அது எங்களுக்கும் மிகப்பெரிய மனக்கசப்பை ஏற்படுத்தியது இவரை நகரச் செயலாளராக ஆக்குவதற்காக எவ்வளவு உழைத்திருப்போம் என்பது எங்களுக்கு தான் தெரியும் ஏனென்றால் ஏற்கனவே நகர செயலாளராக இருந்த எஸ்.என்.எம்.உபயதுல்லா அவர்கள் தலைவர் கலைஞரிடம் மிகவும் நெருக்கமாக இருந்தவர் அவரிடம் இருந்த தஞ்சாவூர் நகர செயலாளர் பொறுப்பை டி.கே.ஜி.நீலமேகத்திற்கு கொடுக்கும் அளவிற்கு நாங்கள் எவ்வளவோ உழைத்திருக்கிறோம் அவற்றையெல்லாம் பல நேரங்களில் உதாசீனப்படுத்தி இருக்கிறார் நீலமேகம் இருந்த போதும் நாங்கள் எல்லாம் ஒரே கட்சி என்பதால் எதையும் வெளியில் சொல்லாமல் கடந்து சென்றிருக்கிறோம் ஆனால் அந்த செயல்கள் அனைத்தும் தலைமைக்கு தெரியப்படுத்தப்பட்டு கொண்டே இருந்தது அதுவும் தற்போதைய பதவி பறிப்புக்கு காரணம் என்கிறார் இன்னொரு உடன்பிறப்பு.

மற்றும் ஒருவர் கூறும் போது: தற்போது திமுகவின் மாநகரச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் சண்.ராமநாதன் திமுக இளைஞர் அணியின் தற்போதைய தலைவராக இருக்கின்ற உதயநிதி ஸ்டாலினின் அன்பையும், ஆதரவையும் பெற்றவர். இவருக்கு மாநகர மேயராக தலைமை வாய்ப்பு அளிக்கப்பட்ட அந்த தருணத்தில் டி.கே.ஜி.நீலமேகம் முழுமையாக இதனை ஏற்றுக் கொள்ளாமல் முரண்பாடுகளோடு நடந்து கொண்டார், அப்போதிலிருந்து இவரின் மீது தலைமைக்கு அதிருப்தி வர ஆரம்பித்தது அது மட்டுமல்லாமல் சண். ராமநாதனுக்கும், டி.கே.ஜி. நீலமேகத்திற்கும், அவ்வளவாக ஒத்துப் போகவில்லை இது அருகில் இருந்த அனைவருக்கும் தெரியும், இதுபோன்ற பல்வேறு காரணங்களால் தான் நீலமேகத்தின் தஞ்சை நகரச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டு தற்போதைய மேயர் ராமநாதனுக்கு அந்தப் பதவி கிடைத்து இருக்கிறது, இருந்தாலும் இருவரும் எங்கள் கட்சியினர்தான் அவர்களுக்கு எங்களது வாழ்த்துக்கள் என்று நாகரிகமாக சொல்லிச் சென்றார் திமுகவின் உடன் பிறப்பு.

தஞ்சாவூரில் அரசியல் நோக்கர்களிடம் இவ்வாறு கேட்டபோது :தற்போது திமுகவின் மாநகரச் செயலாளராக சண.ராம நாதன் தேர்ந்தெடுக்கப்பட்டதும் ஏற்கனவே நகரச் செயலாளராக இருந்த டி.கே.ஜி.நீலமேகத்தின் பதவி பறிக்கப்பட்டதை பற்றியும் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டோம்.

முதலில் தற்போதைய திமுகவின் மாநகர செயலாளருக்கு வாழ்த்துக்கள். அதேபோல திமுகவில் இதெல்லாம் சர்வ சாதாரணம் ஏனென்றால் இந்த கட்சி அண்ணாதுரை அவர்கள் மறைவுக்குப் பின்பு ஒரு குடும்பத்தின் கட்சியாக மாறிவிட்டது. கட்சியில் ஜனநாயகம் இருக்க வேண்டும் ஒருவரே பல ஆண்டுகள் பதவி அனுபவிக்க கூடாது என்பதற்காக தான் திமுகவின் நிறுவனத் தலைவர் அண்ணாதுரை உட்கட்சி தேர்தல் முறையையே கொண்டு வந்தார் ஆனால் இவை அனைத்தும் திமுகவின் தலைவராக மு.கருணாநிதி வந்ததிலிருந்து மாறிவிட்டது அதன் காரணமாக தான் உட்கட்சித் தேர்தல் திமுகவில் தொடர்ந்து நடந்தாலும் திமுகவின் தலைவராக அவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே வர முடிகிறது அது மட்டுமல்லாமல் கலைஞர் இருந்தவரை அவர் விசுவாசிகள் முன்னிலை பெற்றார்கள் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் எனில் அவர் இருந்த காலகட்டங்களில் அவரது மகன் ஸ்டாலினை இளைஞர் அணி தலைவர் ஆக்கி அவருக்கான ஆதரவாளர்களை உருவாக்கினார் அதன் காரணமாக அப்போதைய இளைஞரணி தலைவர் ஸ்டாலின் ஆதரவாளர்கள் பொறுப்பிற்கு கொண்டுவரப்பட்டார்கள் அவர்கள் தான் தற்போது குறிப்பிடப்படும் படியான முன்னணி தலைவர்களாக திமுகவில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது அதே போல தந்தையின் வழியில் ஸ்டாலின் தனது மகன் உதயநிதி ஸ்டாலினை இளைஞரணி தலைவராக கொண்டு வந்தார் அதன்பிறகு தற்போது உதயநிதி ஸ்டாலின் ஆதரவாளர்கள் கட்சியில் முன்னிலைப்படுத்தப்படுகிறார்கள்

 பதவிகள் பெறுகிறார்கள் எனவே தான் ஆரம்பத்திலேயே கூறினேன் திமுகவில் இது ஒன்றும் புதிதல்ல என்று இதன் மூலம் சாமானிய மக்களுக்கு தெரிய வருவது என்னவெனில் திமுகவில் பதவிக்கு வர வேண்டும் எனில் உண்மையான விசுவாசியாக கட்சிக்கு இருந்தால் மட்டும் போதாது, ஸ்டாலினின் குடும்பத்திற்கும் விசுவாசம் ஆக இருந்தால் மட்டுமே அடுத்த கட்ட பொறுப்பிற்கு வர முடியும் என்பதை இந்த நிகழ்வு மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கிறது என்றார்.

தற்போதைய தஞ்சாவூர் மேயராக இருக்கும் சண்.ராமநாதன் இப்போது திமுகவில் கிடைத்திருக்கும் மாநகரச் செயலாளர் பொறுப்பையும் திறம்பட செய்ய நமது மாநாடு இதழின் வாழ்த்துக்கள்.

47930cookie-checkதஞ்சாவூர் திமுகவில் தடாலடி மாற்றம் ஏன் உடன்பிறப்புகள் என்ன சொல்கிறார்கள்
2 thoughts on “தஞ்சாவூர் திமுகவில் தடாலடி மாற்றம் ஏன் உடன்பிறப்புகள் என்ன சொல்கிறார்கள்”
  1. தஞ்சை MLA வாக இரண்டாம் முறையும் தேர்ந்தெடுக்கப்பட் டுள்ள திரு.நீலமேகம் எனும் யாதவர் திமுக.நகரசெயலாளர் பதவியிலிருந்து அகற்றப்பட்ட தற்கு அவருடைய *யாதவ ஜாதிப் பாசம் மட்டும்தான்* காரணம் என்றால் இப்போது திரு.சண்.இராமனாதன் அந்தப் பதவியில் அமர்த்தப் பட்டிருப்பதும், தமிழக முதல்வர் சார்ந்துள்ள *இசை வேளாளர் ஜாதியைச்*சேர்ந்தவர் எனும் ஜாதிப்பாசம் மட்டும்தான். இதை இல்லையென்று மறுக்க முடியுமென்றால் காரணத்தை விளக்கிடுங்கள் 9003118564ல்
    மு.திருவேங்கடம்யாதவ்,தலைவர்,தமிழ்நாடு புதுச்சேரி அனைத்து யாதவர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு. திருச்சி 620006

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!